ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியா வரும் துருக்கி சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 10.8 விழுக்காடு அதிகரிப்பு

சிப்பாங்,  பிப் 11 – கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் மலேசியாவிற்கு வரும்  துருக்கிய சுற்றுலாப் பயணிகளின்  10.8 விழுக்காடு அதிகரித்து 15,623 பேராக பதிவானது.

கடந்த  2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் நாட்டிற்கு வருகை புரிந்த துருக்கி சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 14,096 பேராக இருந்தது.

மலேசியாவை வெளிநாட்டு  பயணிகளுக்கான  கவர்ச்சிகரமான சுற்றுலா இடமாக பிரபலப்படுத்தும் பிரச்சாரம் வெற்றியடைந்துள்ளதை  இந்த எண்ணிக்கை  அதிகரிப்பு பிரதிபலிக்கிறது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ரோஸ்லான் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இந்த எண்ணிக்கை ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறது. நான் ஏன் இந்த எண்ணிக்கையை 2019 புள்ளிவிவரத்துடன் ஒப்பிடுகிறேன்?  காரணம், கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கமாக இருந்ததால், 2023 ஆம் ஆண்டிற்கான தரவு இன்னும் ஆய்வு செய்யப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் விளக்கினார்

இவ்வாண்டில் மலேசியாவை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்காக  பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டை  சுற்றுப்பயணிகள்  எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம் என்று நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த  பாத்தேக் ஏர் விமானத்தை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.  இந்நிகழ்வில் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.


Pengarang :