ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஜே.பி.கே.கே பதவிகளுக்கான நியமன விவகாரத்திற்கு மார்ச் மாத தொடக்கத்தில் தீர்வு- மந்திரி புசார்

சபாக் பெர்ணம், பிப் 14- சிலாங்கூர் கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் 373 உறுப்பினர்கள்  நியமனம் விவகாரத்திற்கு மார்ச் மாத தொடக்கத்தில் தீர்வு காணப்படும்.

இந்த பதவிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாரிசான் நேஷனல் இடையே மேலும் விரிவான விவாதம் நடத்த வேண்டியுள்ளதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரத்தை இறுதி செய்வதற்கு இம்மாத இறுதி வரை அவகாசம் தேவைப்படும் என எதிர்பார்க்கிறோம். சிறப்பான புரிந்துணர்வின் வாயிலாக இப்பிரச்சைனைக்கு தீர்வு காண இயலும் என நம்புகிறோம் என்று மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

இடப் பகிர்வு  தொடர்பான எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டு விட்டது. எனினும், புதிய மேம்பாடுகள் காரணமாக மறுபரிந்துரையை நான் முன்வைக்க வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் தீர்வு காண முடியும் என நம்புகிறேன் என்று சிப்பிகள் களவு போகும் இடத்திற்கு நேற்று வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ஊராட்சி மன்றங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களைத் தாங்கள் திரும்ப ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் டத்தோ மெகாட் ஜூல்கர்னாய்ன் கடந்த மாதம் 20ஆம் தேதி கூறியிருந்தார்.

கிராம மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழுள்ள 373 கிராம மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பு குழு பதவிகளுக்கு குறி வைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :