ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளத் திட்டம் குறித்து 2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், பிப் 14- அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பு முறையை மேம்படுத்தும் முடிவு தொடர்பான அறிவிப்பு வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் போது வெளியிடப்படும் என்று பொதுச் சேவைத் துறை கூறியது.

 சம்பள கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த உத்தேசத் திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக கூடின பட்சம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சமர்ப்பிக்கப்படும் என அது தெரிவித்தது.  

அனைத்து சேவைகளையும் உள்ளடக்கியக நடப்பு சம்பள முறையை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் semaksaraan.jpa.gov.my  என்ற அகப்பக்கம் வாயிலாக வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று அத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

எஸ்.எஸ்.பி.ஏ. எனப்படும் பொதுச் சேவை சம்பள முறை மறுஆய்வு குழுவின் பிரதானக் கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இரண்டாது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசானும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.பி.ஏ. மறுஆய்வுக்குட்பட்ட முன்னெடுப்புகளை மேம்படுத்துவது, குறிப்பாக அரசு ஊழியர்களின் செலவழிப்பு வருமானத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மலேசியா மடாணி கோட்பாட்டிற்கு ஏற்ப அரசு ஊழியர்களின் உற்பத்தி ஆற்றலை அதிகரிப்பதற்கு ஏதுவாக மனித ஆற்றலை மேம்படுத்தும் இலக்குகளில் ஒன்றாக அரசு ஊழியர்களின் செலவழிப்பு வருமான விவகாரம் விளங்குகிறது.


Pengarang :