ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல சிலாங்கூரில்  மடாணி அரசின் மாபெரும் விற்பனை சந்தை.

செய்தி. சு.சுப்பையா

கோல சிலாங்கூரில் .பிப்.23- மடாணி மத்திய அரசின் மாபெரும் விற்பனை சந்தை கோலாகலமாக நடைபெறுகிறது. உள்நாட்டு விவசாய உற்பத்திகள் அனைத்தும் குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்கப் படுகிறது.

5 கிலோ சமையல் எண்ணெய் ரி.ம. 24.00, 10 கிலோ வெள்ளை அரிசி 26.00, 30 முட்டைகள் ரி.ம. 10.00 க்கும் விற்கப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் திறந்துள்ளன. உள் நாட்டு பழ வகைகள் விற்கப்படுகின்றன. அதே வேளையில் ஜூஸாகவும் விற்கப்படுகின்றன.

மார்டி எனப்படும் மத்திய அரசின்  கால்நடை வளர்ப்பு பிரிவும் தனது மாடுகள் மற்றும் அதன் சொந்த உற்பத்தி கோழிகளையும் விற்கின்றன. மார்டி உற்பத்தி 10 கோழிகள் ரி.ம. 500.00 விற்கப்படுகின்றன. இதில் 2 சேவல், 8 பெட்டைகள் அடங்கும். இக்கோழிகள் மார்டியின் பிரத்தியேக உற்பத்திகள்.

இதே போல் மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் நாடு முழுவதும் உள்ள மாட்டு பண்ணைகள், தங்களது உயர்தர மாடுகளை காட்சிக்கு வைத்துள்ளன. இந்த மாடுகள் அனைத்தும் உலக தரத்தில் போட்டியிடும் தரத்தை கொண்டவைகள்.

வருகையாளர்களை கவர பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதிர்ஷ்ட குழுக்கு பரிசுகளும் தினந்தோறும் வழங்கப் படுகின்றன.

இந்த மடாணி விற்பனை சந்தை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 வரை நடை பெறுகிறது. ஒவ்வொரு நாளும் கலந்துக் கொள்பவர்களுக்கு கவர்ச்சிகரமான அதிர்ஷ்ட குழுக்கு பரிசுகள் கொடுக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்வார். அன்றைய தினம் அதிர்ஷ்ட குழுக்கு முதல் பரிசு வாகனம், இரண்டாம் பரிசு மோட்டார் சைக்கிள், ஸ்மார்ட் தொலைக்காட்சி, ஸ்மார்ட் கைப்பேசி, ஸ்மார்ட் கடிகாரம் போன்ற விலை மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த விற்பனை சந்தையில் சிலாங்கூர் மாநில அரசும் பங்கெடுத்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து விவசாய இலாகாக்கள், நிறுவனங்களும் இந்த கோலா கல விற்பனை சந்தையில் இடம் பெற்றுள்ளன.

மேலும் மத்திய அரசின் அனைத்து முகப்பிட சேவைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் எல்லா சேவைகளும் இங்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மடாணி சிறப்பு விற்பனை சந்தை கோல சிலாங்கூர் விளையாட்டு அரங்க வளாகத்தில் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை இரவு வரை நடைபெறுகிறது.


Pengarang :