ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மடாணி அரசாங்கத்தின் ஓராண்டு சாதனை விழா.

செய்தி ; சு.சுப்பையா

கோல சிலாங்கூர். பிப்.24- மடாணி அரசாங்கத்தின் கடந்த ஓர் ஆண்டு சேவைகளின் சாதனைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல 2024 ஆம் ஆண்டில் மடாணி மக்கள் சேவை என்ற பெரு விழா கோல சிலாங்கூர் விளையாட்டு அரங்க வளாகத்தில் 2 ஆம் நாளாக கோலாகலமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்று தொடங்கிய இந்த மக்கள் பெரு விழாவில் குறைந்தது 30,000 கலந்து கொண்டனர். இதில் நேற்று மட்டும் 18,000 முறையாக பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பதிவு செய்தவர்கள் அதிர்ஷ்ட குலுக்கு நிகழ்வில் கலந்து கொள்ளலாம். காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் அதிஸ்டக் குழுக்கு நடத்தப் படுகிறது.

அனைவருக்கும் சிறந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன. நாளை மதியம் 3.00 மணிக்கு பிறகு வாகனம், மோட்டார் சைக்கிள் போன்ற விலை உயர்ந்த பரிசுகள் அதிர்ஷ்ட குலுக்குக்கான  பரிசுகளாக கொடுக்கப்படும்.

கடந்த ஓராண்டு காலத்தில் மடாணி அரசு நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ள சேவை புத்தகமும் அனைவருக்கும் வழங்கப் படுகிறது.

மடாணி அரசாங்கத்தின் பெரும்பான்மையான அமைச்சுக்களின் முகப்பு சேவைகள் திறந்துள்ளன. அமைச்சு வழங்கி வரும் சேவைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க படுகிறது. இதே போல் சிலாங்கூர் மாநில அரசு சேவைகள் பதிவு முகப்பிடம் இங்கு இடம் பெற்றுள்ளன. சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் எல்லா சேவைகளிலும் மக்கள் கலந்து பயனடைய வேண்டும் என்பதற்காக பதிவு சேவை வழங்கப் படுகின்றன.

மக்களை கவரும் வண்ணம் பல் வகை உணவுகள் விற்கப்படுகின்றன. இதே போல் மாலை 6.00 மணிக்கு மேல் உள் நாட்டு கலைஞர்கள் இலவச கலை நிகழ்ச்சி படைக்கின்றனர். காலை 9.00 மணி முதல் இரவு 10.00 வரை இந்த மடாணி அரசின் சாதனை விழா நடைபெறுகிறது.

நாளையும் இந்த விழா தொடர்ந்து நடைபெறும். நாளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் பிரத்தியேகமாக கலந்து கொள்கிறார். மடாணி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு சாதனை புத்தகம் பல் வண்ணங்களில் தரமான புத்தகமாக  வெளியிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துக் கொள்ளும் ஒவ்வொருக்கும் இலவசமாக வழங்கப் படுகிறது.

இந்த 3 நாள் நிகழ்ச்சியில் குறைந்தது 2 லட்சம் பேருக்கு மேல் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று 30,000 பேர் வந்திருந்தனர். இன்று விடுமுறை என்பதால் மூன்று மடங்காக மக்கள் வருகை அதிகரிக்கும் என்று இந்நிகழ்வை யொட்டி பதிவு வேலையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி தெரிவித்தார்.


Pengarang :