ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரிங்கிட் வீழ்ச்சி கண்டாலும் பணவீக்கம் குறைந்து, வெளிமுதலீடு, வேலைவாய்ப்புகள் ஓங்கி உள்ளதால் பொருளாதாரம் வலுவுடன் இருக்கிறது.

செய்தி சு.சுப்பையா

கோலசிலாங்கூர் பிப்.25- கோல சிலாங்கூரில் நடை பெறும் மத்திய மண்டல மடாணி 2024 விழாவை அதிகாரப்பூர்வமாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் உரையாற்றி நிறைவு செய்தார். நாட்டின் ரிங்கிட் மதிப்பு சற்று வீழ்ச்சி கண்டாலும் , பொருளாதாரம் வலுவுடன் இருக்கிறது என்று தெரிவித்தார்.

மத்திய மண்டல மடாணி விழா கடந்த 23 ஆம் தேதியிலிருந்து கோல சிலாங்கூர் விளையாட்டு அரங்கத்தின் வளாகத்தில் நடை பெறுகிறது. நிறைவு விழா பிரதமர் தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் மாட் சாபு, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது, சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, போராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஹஜி சாரணி முகமட் மற்றும் மத்திய மாநில அரசின் உயர் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் மாலை 5.00 மணி வரை 62,500 பேர் கலந்து கொண்டனர் என்று அதன் பதிவு தெரிவித்தது.

நண்பகல் 2.45 மணிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் விழா மண்டப நுழைவாசலை வந்தடைந்தார். அவரை சிலாங்கூர் மாநில மந்திரி புசார், பேராக் மந்திரி புசார், விவசாய அமைச்சர் மாட் சாபு, கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

விழா மண்டபத்தில் சுற்றுலா துறை அமைச்சின் கீழ் பல்லின மக்கள் அடையாளம் கொண்ட நடன நிகழ்ச்சி படைக்கப் பட்டது.

தொடர்ந்து நிறைவு உரை ஆற்றினார் பிரதமர். அதன் பின்னர் மக்களுடன் கலந்து உரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்வு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இக்கலந்துரையாடலில் நாட்டு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. வாழ்க்கை தரம் உயர்வு, அரசு ஊழியர்களின் தர மேம்பாடு, கடன் வசதி, ரிங்கிட் வீழ்ச்சி மற்றும் டோல் கட்டணம் பெரும் சுமையாக இருக்கிறது என விவாதிக்கப்பட்டது.

இக்கேள்விகளுக்கு டத்தோ ஸ்ரீ அன்வார், டத்தோ ஸ்ரீ அமிருடின், டத்தோ ஸ்ரீ சாராணி, டத்தோ ஸ்ரீ மாட் சாபு ஆகியோர் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தனர்.

கேள்வி பதில் அங்கம் முடிவுற்ற பிறகு டத்தோ ஸ்ரீ அன்வார் மக்கள் சந்தைக்கு சென்று பார்வையிட்டார். சுமார் மாலை 5.10 மணிக்கு பிறகு விடை பெற்று சென்றார்.


Pengarang :