ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக எம்.பி.க்களுக்கு அமைச்சரவை கண்டனம்

புத்ராஜெயா, மார்ச் 8 – கடந்த இரண்டு வாரங்களில் டேவான் ராக்யாட்டில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எம்.பி.க்கள் வெளியிட்ட பொய்யான அறிக்கைகள் குறித்து டேவான் ராக்யாட் சபாநாயகரின் அலுவலகத்தை அமைச்சரவை தொடர்பு கொள்ளும்.

இன்றைய கூட்டத்தில் இத்தகைய நடத்தைக்கு எதிராக அமைச்சரவை உறுதியான கண்டனத்தை தெரிவித்ததாக தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

அமைச்சரவை டேவான் ரக்யாட் சபாநாயகர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யும்.

ஏனெனில் முதலில் தவறான  அறிக்கையை வெளியிட்டவர், பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

எம்.பி.க்கள் வெளியிட்ட தவறான அறிக்கைகள், மன்னிப்புக் கேட்க படுவதற்கு முன்பு, டேவான் ராக்யாட்டை குழப்பி விட்டதாக ஃபஹ்மி கூறினார்.
” அவர்களின்  கூற்று  அபத்தம் என்பதனை அவர்கள் உணர்ந்தார்களா , அதற்கு  ஏதேனும் வருத்தம் இருந்ததா என்பதில் ஒரு சர்ச்சை உள்ளது. தாசெக் குளுகோர் (டத்தோ வான் சைபுல் வான் ஜான்), பெங்காலான்  சிப்பா (டத்தோ அஹ்மத் மர்சுக் ஷாரி) அல்லது மாராங் (டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்) ஆகிய (எம்.பி.க்கள்) சொன்னது தவறானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்களா,” என்று அவர் வினவினார்.
திங்கட்கிழமை (மார்ச் 11) தொடங்கும் அமர்வில் எழுப்பப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

செவ்வாயன்று (மார்ச் 5), டேவான் ராக்யாட்டில் பிரதமருக்கு எதிராக அவதுறான அறிக்கை வெளியிட்டதற்காக வான் சைபுல் மன்னிப்பு கேட்டார்.

பிப்ரவரி 28 அன்று அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அவர் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு டேவான் ராக்யாட் சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி.யிடம் கேட்டதை அடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.
– பெர்னாமா


Pengarang :