ECONOMYMEDIA STATEMENTNATIONAL

149 மாநில அரசு ஊழியர்கள் சிறந்த சேவைக்கான விருதைப் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 10- மாநில அரசின் 149 ஊழியர்கள் சிறந்த சேவைக்கான விருதைப் பெற்ற வேளையில் ஓய்வு பெற்ற 37 ஊழியர்களுக்கு ‘ஜாசமூ டிகெனாங்‘ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இங்குள்ள  மார்ட்ஹியா அண்ட் சூட்ஸ் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிமும் கலந்து கொண்டார்.

முன்னதாக இந்நிகழ்வில் அவர், விருதைப் பெற்றவர்களுக்கு தாம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், எதிர்காலத்தில் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவதற்குரிய உத்வேத்தையும் புத்துணர்வையும் இந்த விருதுகள் வழங்கும் என நம்புவதாகவும் அவர் சொன்னார்.

மாநில அரசு நிர்வாகத்தின் அடித்தளமாக மாநில அரசு செயலகம் விளங்கி வருவதால் இது மற்றத் துறைகளுக்கு முன்மாதிரியாகவும் படிப்பினையாகவும் விளங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

திறமையான தர நிர்வாகம் மற்றும் தொழில்நிபுணத்துவத்தை நிலை நிறுத்துவதில் மாநிலத்திலுள்ள மற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு மாநில அரசு தலைமைச் செயலகம் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இதன் மூலம் மற்ற மாநிலங்கள் மதிக்கக்கூடிய மற்றும் நம்மை வழிகாட்டியாக கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த இயலும் என்றார் அவர்.

எனினும், இலக்கை அடையும் வேட்கையில் மாநில அரசு ஊழியர்களுக்கு உயரிய மதிப்பைத் தரக்கூடிய உயர்நெறி, நம்பகத்தன்மை வசீரகப் போக்கை மறந்துவிடக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.

நாம்  ஆற்றுகின்ற ஒவ்வொரு காரியமும் நாம் சார்ந்துள்ள அமைப்புகளுக்கு மட்டுமின்றி நமக்கும் உரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.


Pengarang :