ECONOMYMEDIA STATEMENT

கோத்தா புத்திரியின் பசுமை தொழில் பூங்கா RM8 பில்லியன் மதிப்பு உள்ளூர் முதலீட்டை ஈர்க்கும்

ஷா ஆலம், மார்ச் 11: கோம்பாக்கில் உள்ள கோத்தா புத்திரியின் பசுமை தொழில் பூங்காவின் (GRIP) முதல் கட்டத்தில் 13 இடங்களின் மேம்பாடு RM8 பில்லியன் மதிப்பு உள்ளூர் முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“GRIP Kota Puteri“ என்பது சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகத்தால் (PKNS) இயக்கப்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட பூங்கா ஆகும். மேலும், 6,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. “இது உள்ளூர் மக்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியையும் தூண்டுகிறது என இங் ஸீ ஹான் கூறினார்.

“இத்திட்டம் பல வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வேலையின்மை விகிதத்தைக் குறைக்கவும் உதவும்” என்று திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

ஹில்டன் ஷா ஆலம் ஐ-சிட்டி ஹோட்டல் டபுள் ட்ரீயில் நடைபெற்ற இந்த விழாவில் பிகே என்எஸ் குழுவின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மஹ்மூட் அப்பாஸும் கலந்து கொண்டார்.

இத்திட்டத்தின் முதல் கட்டம் 2027 இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1)  அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கட்டப்படும்.

இத்திட்டம் 152 ஹெக்டேர் பரப்பளவில் மூன்று கட்டங்களாக உருவாக்கப்பட்டது. இந்த மே மாதம் தொடங்கப்பட்டு “GRIP“ முழுமையாக நிறைவடைய சுமார் 10 ஆண்டுகள் ஆகும்.


Pengarang :