SELANGOR

புதிய செமினி சுகாதார கிளினிக்கின் கட்டுமானம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும்

ஷா ஆலம், மார்ச் 15: நாள் ஒன்றுக்கு 800 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் புதிய செமினி சுகாதார கிளினிக்கின் கட்டுமானம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலு லங்காட்டைச் சுற்றியுள்ள சுகாதார கிளினிக்குகளின் கூட்டத்தை சமாளிக்க புதிய கிளினிக்குகள் கட்டப்பட்டு வருவதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் சௌனி கூறினார்.

“உள்ளூர்வாசிகளின் சுகாதார சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்க அம்பாங் சுகாதார கிளினிக் மற்றும் காஜாங் சுகாதார கிளினிக்கின் இயக்க நேரத்தை சுகாதார அமைச்சகம் நீட்டித்தது.

“அம்பாங் சுகாதார கிளினிக் மற்றும் பண்டார் பாரு பாங்கி சுகாதார கிளினிக் ஆகியவை வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கான மஞ்சள் காமாலை பரிசோதனை போன்ற சிறப்பு சேவைகளுக்காகச் செயல்படுகின்றன,” என்று அவர் மக்களவை அமர்வில் கூறினார்.

உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார கிளினிக்குகளும் “MySejahtera“ மூலம் இணையச் சந்திப்பை தொடங்கியுள்ளன என்று அவர் கூறினார்.

“இந்நடவடிக்கை உலு லங்காட்டில் உள்ள அனைத்து சுகாதார கிளினிக்குகளும் நோயாளிகளின் வருகையை நிர்வகிப்பதற்கும், நெரிசலைக் குறைப்பதற்கும் உதவும், ” என்று அவர் கூறினார்.

கூடுதலாக, 2023 முதல் 2025 வரை, நாடு முழுவதும் 1,200 பழமையான சுகாதார கிளினிக்குகள் புதுப்பிக்க இலக்கு வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு 524 புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப் பட்டன.

“இந்த ஆண்டு RM150 மில்லியன் ஒதுக்கீட்டில் நாடு முழுவதும் மேலும் 400 பழமையான சுகாதார கிளினிக்குகளை மேம்படுத்த சுகாதார அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :