ANTARABANGSA

பாலஸ்தீன நிர்வாகத்திற்குப் புதிய பிரதமர் நியமனம்  

ரமல்லா, மார்ச் 15 – பாலஸ்தீன   நிர்வாகத்தை சீர்திருத்தும் திட்டத்திற்கு உதவும் நோக்கில் அதிபர் மாமுட் அப்பாஸ்,  தனது  சகாவும்  முன்னணி வணிகப் பிரமுகருமான முகமது முஸ்தாபாவை பிரதமராக நியமித்ததாக அரசு நடத்தும் வாஃபா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட  பாலஸ்தீனப்  பகுதிகளின் நிர்வாகக் குழுவை மறுசீரமைக்கவும் புத்துயிர் அளிக்கவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும் அனைத்துலக சமூகம் விடுத்த  நெருக்குதலின் காரணமாக  முஸ்தாபாவின் நியமனம் அமலுக்கு வந்துளளது.

பாலஸ்தீன  அதிகாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த நபராக  அதிபர் அப்பாஸ் இருந்து வருகிறார். ஆனால்  புதிய அரசாங்கத்தை நியமிக்கும் அவரின் நடவடிக்கை,  நிர்வாகத்தில்  மாற்றம செய்ய வேண்டும் என்ற அனைத்துலக கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

முந்தைய மோதலைத் தொடர்ந்து காசாவை மறுசீரமைக்க உதவிய முஸ்தாபா, ஐந்து மாதங்களுக்கும் மேலான போரினால் சீர்குலைந்த பகுதியில் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்புக்கும்  பாலஸ்தீன அதிகார அமைப்புகளை சீர்திருத்துவதற்கும் தலைமை தாங்கியதாக வாஃபா மேலும் கூறியது.

கடந்த பிப்ரவரி மாதம் பதவி துறந்த  முன்னாள் பிரதமர் முகமது  ஷ்டயேவுக்குப் பதிலாக முகமது முஸ்தாபா நியமிக்கப்பட்டுள்ளார்.


Pengarang :