ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கார் மோதி யானை காயம்- ஓட்டுநர் உயிர்த் தப்பினார்

கோல திரங்கானு, மார்ச் 16-   செத்தியூவில் உள்ள கம்போங் கோலாமில் யானை மீது வாகனம் மோதியதில் அதன் ஓட்டுநர்  அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினார்.

இந்த விபத்தில் சம்பந்தப்படட  ஷாருல் அஸ்மா சே சமோன் (42) என்பவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று செத்தியூ மாவட்ட காவல்துறை தலைவர் டிஎஸ்பி அஃபாண்டி ஹூசேன் தெரிவித்தார்.

எனினும், நிறுவன மேலாளரான சம்பந்தப்பட்ட நபர்  ஓட்டிச் சென்ற போர்ஷே கெய்னின் காரின்  முன்பகுதி, கண்ணாடிகள், பம்ப்பர்,  முன் விளக்குகள் மற்றும் போனட்  ஆகியவை  கடுமையாக  சேதமடைந்தன.

இந்த விபத்து தொடர்பில் நேற்றிரவு 10.15 மணியளவில் செத்தியூ போக்குவரத்து புகார் மையத்தைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினர் ஒருவருக்கு அழைப்பு வந்தது என்று அவர் சொன்னார்.

அந்த கார் ஓட்டுநர்  ரூ10ல் இருந்து லெம்பா பீடோங்  பள்ளத்தாக்கு நோக்கி சென்று சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது அவர் கூறினார்.

ஜாலான் கோல திரங்கானு – கம்போங் ராஜா சாலையின் 45வது  கிலோமீட்டரை அடைந்த போது  இவ்விபத்து நிகழ்ந்தது. சாலையில் இருந்த இருந்த யானையை அவரால்   தவிர்க்க நேரம் இல்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மோதல் காரணமாக காலில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் விழுந்த யானை பின்னர் எழுந்து காட்டிற்குள் சென்றதாக   அஃபாண்டி குறிப்பிட்டார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக பெசுட் மாவட்டத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் தீபகற்ப மலேசியாவின் தேசியப் பூங்கா (பெர்ஹிலிடன்) அலுவலகத்திடம் இந்த விபத்து குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அந்த யானையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில்  ஒன்பது பேர்  பெசுட்  மாவட்ட பெர்ஹிலித்தான் உறுப்பினர்கள்  பொதுமக்களின் உதவியுடன்  தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :