ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஏப்ரல் 8 முதல் 13 வரை நோன்பு பெருநாளை முன்னிட்டு Op Selamat சாலை பாதுகாப்பு நடவடிக்கை

கோலாலம்பூர், மார்ச் 20 – எதிர்வரும் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறை Op Selamat 22 ஐ சாலை பாதுகாப்பினை ஏப்ரல் 8 முதல் 13 வரை  அமல்படுத்த உள்ளது.

ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு சீரான போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இயக்குநர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி கூறினார்.

“அதுமட்டுமல்லாமல், நோன்பு பெருநாளின் போது வீடுகள் மற்றும் வளாகங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையுடன் JSPT ஒத்துழைக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்

நோன்பு பெருநாள் மாதத்தில்  தலை நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் 140 இடங்களில், 200 போக்குவரத்து பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நோன்பு பெருநாள் மாதத்தில் ஷாப்பிங் செய்பவர்கள் தவிர, வேலைக்குச் செல்பவர்கள் உடன் தினமும் சுமார் ஒரு மில்லியன் வாகனங்கள் நகருக்குள் வரும் என்று காவல்துறை எதிர்பார்க்கிறது.

“சாலைகளைப் பயன்படுத்துவோர் பொறுமையாக இருக்கவும், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பணியில் இருக்கும் போக்குவரத்து பணியாளர்களின் அறிவுறுத்தல்களை  பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :