MEDIA STATEMENTNATIONAL

தாய்மொழிப் பள்ளிகள் இந்நாட்டின் இன ஒற்றுமைக்கு தூண்.  சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜூல்கிப்ளி

பெஸ்தாரி ஜெயா, மார்ச் 21- கோலசிலாங்கூர்  முன்னாள்  (கெ அடிலான்) நகராட்சி உறுப்பினரும்  கோலசிலாங்கூர் மண்ணின் மைந்தர்களின்  முக்கிய தலைவரான திரு. திருமூர்த்தி அவர்களின்  சிறப்பான ஏற்பாட்டில்  கோலசிலாங்கூர்  மண்ணின்  மைந்தர்களின்  ஒற்றுக்கூடல்  மிக சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில்  உரை நிகழ்த்திய சுகாதார அமைச்சர் ”  இந்நாட்டில் ஒற்றுமைக்கு தாய்மொழிப் பள்ளிகள்  தூணாக  செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அதுகுறித்த தீவிரவாத கொள்கையாளர்கள்  எதிர்மறையான   கருத்துக்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என்று   கேட்டுக்கொண்டார்

மலேசியாவில் தாய்மொழிக் கல்வி என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அதை  அனைவரும் மதித்து நடப்பது நாட்டுக்கு நலம் என்றார்.  நாம் ஒன்றாக செயல்பட்டு பல சிக்கல்களை கடந்து  வந்திருக்கிறோம்.  இன்றும் நாடு பெரிய பொருளாதார சவால்களை எதிர்நோக்கி உள்ளது.  அதிலிருந்து நாடு மீட்சி பெறுவது , இந்த நாட்டுக்கும் ,மக்களுக்கும் நல்லது.

ஆக நாம் ஒற்றுமையாக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் சிலர் தீவிரவாதங்களை  மக்களிடையே விதைக்க முனைகிறார்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல
தங்கள் அரசியல் சுயநலத்திற்காக அவர்கள்  தவறான சிந்தனைகளை விதைத்து மக்கள் மத்தியில் குழப்பம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்றார்.

.நாட்டில் தேசிய மொழி பிரதான மொழியாக இருந்தாலும், தாய்மொழிக் கல்வியும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் இந்நாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் தளங்களாக இன்றுவரை விளங்கி வருகின்றன,  அது தொடர்ந்து வளர  நாங்கள் துணை நிற்போம் என்றார்.


Pengarang :