ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாணவர் விடுதி மரணம் கல்வி அமைச்சு முழுமையாக ஒத்துழைக்கும்

புத்ராஜெயா, மார்ச் 23 – உடலில்  காயங்களுடன் நேற்று விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட தொழிற்கல்லூரி மாணவர் மரணம் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க கல்வி அமைச்சகம் (MOE) தயாராக உள்ளது.

அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொடுமைப் படுத்துதல் போன்ற தவறான நடத்தைகள் உடன் சமரசம் செய்ய மாட்டோம் என்று அது கூறியது.

“சபாவில் உள்ள தொழிற் கல்லூரி மாணவரான பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு MOE வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவிக்கிறது.
“பாதிக்கப்பட்டவரின் மரணம் இன்னும் அதிகாரிகள் விசாரணையில் உள்ளது மற்றும் MOE தனது முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளது” என்று அமைச்சு இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி MOE உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.  “குடும்ப உறுப்பினர்கள், பிற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உளவியல் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது,” என்று அது கூறியது.

நேற்று, 17 வயது ஆண் மாணவர் விடுதியில் உடலின் பல பாகங்களில்  காயங்களுடன் தரையில் இறந்து கிடந்தார்.  சபா, லஹாட் டத்து காவல்துறைத் தலைவர் ஏசிபி ரோஹன் ஷா அகமது கூறுகையில், பாதிக்கப் பட்டவருக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே தவறான புரிதல் இருந்ததால் அவருக்கு மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
16 முதல் 19 வயதுக்குட்பட்ட 13 ஆண் மாணவர்கள், குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Pengarang :