ECONOMYMEDIA STATEMENTNATIONAL

‘பாடு‘ திட்டப் பதிவுக்காக ஆறு மாவட்டங்களில் 32 முகப்பிடங்கள் இன்று திறப்பு

ஷா ஆலம், மார்ச் 24- ‘பாடு‘ எனப்படும் முதன்மை தரவு மையத்தில் பதிவு செய்வதற்கு இன்னும் ஆறு தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அந்த தளத்தில் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த பதவு நடவடிக்கைக்காக மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் 32 முகப்பிடங்கள் இன்று காலை 9.00 மணி தொடங்கி பிற்பகல் 2.00 வரை திறக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில புள்ளி விபரத் துறை கூறியது.

விரைந்து வாருங்கள், பாடு தரவு மையத்தில் பதிவு செய்யுங்கள் என்று அத்துறை தனது பேஸ்புக் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளது.

இலக்கிடப்பட்ட உதவிகள் கிடைப்பதற்குரிய வாய்ப்பினை தவறவிடாமலிருப்பதற்காக 18 வயதுக்கும் மேற்பட்டோர் குறிப்பாக குடும்பத் தலைவர்கள் இந்த பாடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாடு முகப்பிடங்கள் திறக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் வருமாறு-

கோம்பாக், 

 

– டேசா சத்து தேசிய தகவல் மையம் (நாடி)                            

  – நாடி வங்சா பெர்மாய்                                                       

  – பாலாய் பெங்குளு முக்கிம் ஸ்தாபாக்                                   

  – ஜூவாலான் ஈக்கான் மூரா, பிளாட் ஏயு1பி, தாமான் கிராமாட்

கிள்ளான்

– சிராஜூடின் அல்-அனுவார் பள்ளிவாசல், 

கம்போங் பத்து பிலா                

–   பூலாவ் இண்டா தேசியப் பள்ளி                                                

 – சுராவ் ஷாரிபுல் ஹூடா, தாமான் கேம், கோலக் கிள்ளான்                     

 – ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், கம்போங் பிராப்பாட், காப்பார்                        

கோல லங்காட்

– டிஜிட்டல் பொருளாதார மையம் (பெடி) கஞ்சோங் டாராட்                 

 – பாலாய் ராயா கம்போங் ஓராஸ் அஸ்லி புக்கிட் தாடோம்                               

– மேடான் செலேரா எம்.டி.கே.எல். தாமான் ரியா

கோல சிலாங்கூர்

– பெடி தாமான் சவுஜானா உத்தாமா                                    

  – பெடி பெக்கான் ஈஜோக்                                                 

  – பெடி தாமான் ஸ்ரீ சஹாயா                                            

  -பெடி  கம்போங் பத்து 19, ஜெராம்                                                      

 – பெடி சுங்கை சீரே 

உலு லங்காட்

– பெரேனாங் பெங்குளு அலுவலகம்                                     

  – பெடி தாமான் அகமது ரசாலி                                                  

  – தாமான் பெர்காசா பாசா 2, 

    சூராவ் அல்-முக்காரபின்                        

   –  ஜேஎம்பி பங்சாபுரி ஸ்ரீ அங்கிரிக் பண்டார் பாரு பாங்கி                         

 –  மேடான் செலேரா சீமி, சுங்கை சோ                                                 

  – எம்.பி.கே.கே.  கம்போங் பாண்டான் டாலாம்                              

– ஜாமியுல்-ஹூடா பள்ளிவாசல் கம்போங் மிலாயு அம்பாங்                          

 – ஜாலான் மெர்டேக்காக சமூக மண்டபம்

உலு சிலாங்கூர்

– லோட்டஸ் புக்கிட் பெருந்தோங்                                         

 – நாடி பெல்டா சுஹார்த்தே                                                              

– நாடி பெல்டா கெடாங்சா                                                             

 – நாடி பெல்டா சுங்கை திங்கி                                                                                                                                – நாடி பெக்கான் கோல குபு பாரு                                       

 – எக்கோன்சேவ் பத்தாங் காலி

 


Pengarang :