SELANGOR

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் பணி  ஏழு மாதங்களில் நிறைவடையும்

சுபாங் ஜெயா, மார்ச் 27: ஜாலான் வாவாசான், தாமான் வாவாசானில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் பணி, தற்போது இரண்டாம் கட்டத்திற்கு நுழைந்துள்ளது. இப் பணி ஆறு முதல் ஏழு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தின் உரிமையாளர்  அடையாளம் காணப்பட்டுள்ளது. வாவாசான் இந்திரா  என்ற  நிறுவனம் “Wawasan Indera Sdn Bhd“, நிலைத்தன்மையை உறுதிப்படுத்தல் பணிக்கான முழு செலவையும்  ஏற்க ஒப்புக்கொண்டதாகவும் டத்தோ பண்டார் கூறினார்.

” மேம்பாட்டு பணி உடனடியாக மேற்கொள்ளப்படும். நில மேம்பாட்டாளர் நில உரிம விவகாரங்களுக்கு தீர்வு கண்டு மேற்படி வேலை  நடந்து கொண்டிருப்பதால், சிறிது அவகாசம்  தேவை,  குடியிருப்பாளர்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

கடந்த டிசம்பர் 16 அன்று அப்பகுதியில் உள்ள ஒன்பது வீடுகளில் வசித்த வந்த மொத்தம் 29 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற உத்தரவிடப் பட்டனர்.


Pengarang :