ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் பணியில் 10,000 டி.என்.பி. ஊழியர்கள்

கோலாலம்பூர், ஏப் 7- நோன்புப் பெருநாளின்  போது சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தீபகற்ப மலேசியா  முழுவதும் 11 மாநிலங்களில் சேவைச் சங்கிலியில் உள்ள கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை  தெனாகா நேஷனல் பெர்ஹாட்(டி.என்.பி.)  பணியில் ஈடு படுத்தும்.

நோன்புப் பெருநாளுக்கான ஏற்பாடுகளில் பொது மக்கள் மும்முரமாக ஈடுபடுவர் என்பதால் பெருநாளுக்கு  முன்னதாக அதாவது 1 ஷியாவாலுக்கு முந்தைய நாள் தொடங்கி  72 மணி நேரத்திற்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று டி.என்.பி. தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ மெகாட் ஜலாலுடின் மெகாட் ஹசான் கூறினார்.

இந்தப் பணியானது அந்தந்த சேவைத் துறை ஊழியர்களின் அன்றாட வழக்கமான பணியாக இருந்தாலும் இந்த ஊழியர்கள் ஒவ்வொருவரும் நாடு முழுவதும் உள்ள பயனீட்டாளர்களின் நலனுக்காக தங்களால் இயன்றதைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில், மகளிர் சங்கத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பெருநாள் பலகாரங்களை  பரிநாக வழங்கும் பாரம்பரியத்தைப் பேணி வருவதாக டி.என்.பி. தெரிவித்துள்ளது.


Pengarang :