ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பயணத்தை திட்டமிடுங்கள், வேக வரம்பை பின்பற்றுங்கள்- பிளஸ் நிறுவனம் கோரிக்கை

ஷா ஆலம், ஏப் 11- பெருநாள் காலத்தில் செளகரியம்  மற்றும் பாதுகாப்பிற்காக  தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு வடக்கு- தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்) நிறுவனம் வாகனமோட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பரபரப்பான  நாட்களில் பயணம் செய்வதைத் தவிர்ப்பதற்காக இந்த பயண வழிகாட்டி வெளியிடப்படுவதாக பிளஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

மேலும், பயணத்தை தொடங்குவதற்கு  முன் வாகனத்தை சர்வீஸ் செய்யுங்கள்.  நெரிசலான சாலைகளைத் தவிர்க்க வேஸ் (Waze) அல்லது  கூகுள் மேப் (Google Maps) செயலியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.

உங்களிடம் போதுமான  அளவு ‘டச் என் கோ’ அல்லது ‘இ-வாலட்’ இருப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதே கட்டண முறையைப் பயன்படுத்தி டோல் சாவடிக்குள்  நுழைவதையும் வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிளஸ் தெரிவித்துள்ளது.

கூடுதலாக,  ஓய்வு  நிலையங்களில் அல்லது பக்க நிறுத்தங்களில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் பயணத்தின் போது வேக வரம்பைக் கடைப்பிடிக்கவும் வாகனமோட்டிகள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாம் அனைவரின் நன்மை மற்றும் பாதுகாப்பிற்காக பின்வரும் ஏழு குறிப்புகளை பின்பற்றுங்கள். நிச்சயமாக,  பலனைக் காண்பீர்கள் என அது குறிப்பிட்டது.


Pengarang :