MEDIA STATEMENTNATIONAL

கெந்திங் ஹைலண்ட்சில் கலவரத்தில் ஈடுபட்ட எண்மருக்கு போலீஸ் வலை வீச்சு

குவாந்தான், ஏப் 12- கெந்திங் ஹைலண்ட்சில் உள்ள கெந்திங் கிளப்பில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவ எட்டு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த கிளப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) மூலம் அந்த எண்மரும் அடையாளம் காணப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

ஜோகூர், கெம்பாஸ் உத்தாமாவைச் சேர்ந்த லிம் யோங் சென் (வயது 43), கோத்தா திங்கி, தாமான் ஸ்ரீ லாலாங்கைச் சேர்ந்த தாய் கிம் டார் (வயது 44), ஜோகூர், தாமான் டேசா கெம்பாசைச் சேர்ந்த ஓங் ஜூன் சுவான் (வயது 39),  கிள்ளான், தாமான் பாயு பெர்டானாவைச் சேர்ந்த இவென் கோ ஸென் (வயது 23) ஆகியோரை த் தாங்கள் தேடி வருவதாக அவர் சொன்னார்.

மேலும், பினாங்கு, சுங்கை பாக்காப் இண்டாவைச் சேர்ந்த கோர் சூன் திட் (வயது 24), பூலாவ் பங்கோர், பாசீர் போகோக்கைச் சேர்ந்த சுய் கா ஃபாய் (வயது 25), புக்கிட் மெர்தாஜம், தாமான் இம்பியான் இண்டா அல்மாவைச் சேர்ந்த டான் சுன் ஹோ (வயது 22) மற்றும் பண்டான் ஜெயாவைச் சேர்ந்த ஹோஸ் யின் பின் (வயது 46) ஆகியோரும் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளனர் என்றார் அவர்.

இந்த கைகலப்பு தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு விட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் வரை தலா 2,200 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Pengarang :