SELANGOR

கடன் பாக்கி தொடர்பான விபரங்களை இணையம் வழி அறிய வாய்ப்பு

ஷா ஆலம், ஏப் 16– யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின் (ஹிஜ்ரா)
தொழில்முனைவோர் இப்போது தங்கள் வணிக கடன் பாக்கி தொடர்பான விபரங்களை
இணையம் வழி சரிபார்க்கலாம்.

வணிக கடன் பாக்கி தொடர்பான விபரங்களை அறிய சம்பந்தப்பட்ட தொழில்முனைவோர் http://mikrokredit.selangor.gov.my/ என்ற அகப்பக்கம் மூலம் தங்களைப் பதிவு செய்யலாம் என்று ஹிஜ்ரா சிலாங்கூர் அறிவித்துள்ளது.

உதவி தேவைப்படுவோர் கிளை அலுவலகங்களில் உள்ள கடன் வசூலிப்பு அதிகாரியை நேரில் சென்று காணலாம். ஹிஜ்ரா சிலாங்கூர் நிதியளிப்பு பிரசுரங்களை பதிவிறக்கம்
செய்ய https://www.hijrahselangor.com/rilahan-skim-hijrah…/ இணைப்பை நாடவும்.

ஹிஜ்ராவுடனான உங்கள் கடப்பாட்டிற்கு நன்றி என்று அந்நிறுவனம் தனது முகநூலில் பக்கத்தில் தெரிவித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிஜ்ரா, சிறு தொழில்களைத் தொடங்க அல்லது
வணிகங்களை மேம்படுத்த விரும்புவோருக்கு மூலதன கடனுதவியை வழங்கி வருகிறது.

ஐ-பிசினஸ்,  ஐ-பெர்மூசிம்,  நியாகா  டாருல் எஹ்சான்  (நாடி),  கோ டிஜிட்டல்   மற்றும்  ஜீரோ டு ஹீரோ  ஆகிய கடனுதவித் திட்டங்களை ஹிஜ்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.


Pengarang :