NATIONAL

நாடு முழுவதும் 6,034 புதிய ஒப்பந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஏப்17 – நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 15 முதல் மொத்தம் 6,034 புதிய ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் 1,858 ஆசிரியர்கள் இடைநிலைப் பள்ளிகளிலும், மீதமுள்ள 4,176 ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

“புதிய சேவை ஒப்பந்த ஆசிரியர்களை பணியமர்த்துவது மூன்று அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது, அதாவது சேவையின் ஆர்வம், காலியான பதவிகள் மற்றும் பள்ளியின் தற்போதைய விருப்பம் அல்லது பாடத் தேவைகள் ஆகியவை ஆகும்.

“நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் புதிய ஆசிரியர்களை நியமித்ததில் கல்விச் சேவை ஆணைக்குழுவுக்குக் கல்வி அமைச்சு தனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனையை நிவர்த்தி செய்ய கல்விச் சேவை ஆணைக்குழுவுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும் அமைச்சகம் கூறியது.

புதிய சேவை ஒப்பந்த ஆசிரியர்களின் நியமனம், தேசியக் கல்வியின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான மடாணி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியின் பிரதிபலிப்பாகும்.

– பெர்னாமா


Pengarang :