கங்கார், ஏப்.21- இங்குள்ள கம்போங் தித்தி தோக் பண்டார் ஆற்றின் அருகே உள்ள புதர் பகுதியில் ஆடவர் ஒருவர் மேல் சட்டையின்றி கைலி அணிந்த நிலையில் தரையில் நேற்று இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
சே மான் சே பி (வயது 68) என்று அழைக்கப்படும் அந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் காலை 11.10 மணியளவில் ஆடவர் ஒருவர் கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்தாக
பெர்லிஸ் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது அப்துல் ஹலிம் கூறினார்.
அந்த முதியவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், இறந்தவர் தங்கள் தந்தை என்றும் மேடான் உத்தான் அஜி கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனார் என்றும் அவரின் மகன் உறுதிப்படுத்தினார் என என்று அப்துல் ஹலிம் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த முதியவரைக் கண்டுபிடிப்பதற்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகக் கூறிய அவர், உயர் இரத்த அழுத்த பாதிப்பைக் கொண்டிருந்த அந்த முதியவர் இங்குள்ள துவாங்கு ஃபவுசியா மருத்துவமனையில் மனநல சிகிச்சையைப் பெற்று வந்தார் என்றார்.
சம்பவ இடத்தில் தடயவியல் குழு மேற்கொண்ட சோதனையில் முதியவரின் மரணத்தில் குற்றத்தனமைக்கான கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தற்போது இந்த வழக்கு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.