ஷா ஆலம், ஏப் 23 – ஏப்ரல் 15 அன்று கிள்ளானில் மோட்டார் சைக்கிளில்  சென்று  6 பறிப்பு  சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நபர் ஒருவர் லங்காவியில் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

மேலும், 24 வயதான அந்த நபர் குவாவின் மேடன் செலேரா பெனாரக் முன் மாலை 4.15 மணியளவில் காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்காக மீண்டும் கிள்ளானுக்கு அழைத்து வரப்பட்டதாக கிள்ளான் செலாத்தான் காவல்துறைத் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் கூறினார்.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் நபரான சந்தேக நபருக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கு ஐந்து முந்தைய பதிவுகள் இருப்பதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“சந்தேக நபர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார். மேலும், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 394 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும்.

“விசாரணை அதிகாரி விசாரணைகளை இறுதி செய்து வருகிறார். மேலும் இந்த வழக்கு விரைவில் துணை அரசு வழக்கறிஞருக்குப் பரிந்துரைக்கப்படும்” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் 20 வயதுடைய பெண்ணின் பையை பறித்துச் சென்றுள்ளார்.

ராஜா பெரெம்புவான் சரினா இடைநிலைப்பள்ளி அருகே நடத்த இச்சம்பவத்தில் சாலையில் விழுந்ததால் பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக சா ஹூங் கூறினார்.

பெர்னாமா