NATIONAL

பூனைக்குட்டிக்கு தீவைப்பு – அடாதச் செயல் புரிந்த ஆடவர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், ஏப் 24- பூனைக்குட்டிக்கு எரியூட்டியதாகச் சந்தேகிக்கப்படும்
மூன்று ஆடவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் காஜாங், சுங்கை ராமால் பாரு, ஸ்ரீ கெனாரி அடுக்குமாடி
குடியிருப்பில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.

அந்த ஆடவர்களின் இந்த அடாதச் செயல் அங்குள்ள சி.சி.டி.வி.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகக் காஜாங் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது ஜைட் ஹசான் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் 63 வயது மாது ஒருவர் நேற்று காலை 10.51
மணியளவி போலீசில் புகார் செய்ததாக அவர் சொன்னார். இச்சம்பவம்
நேற்று முன்தினம் பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்தது கண்காணிப்பு
கேமரா மூலம் போலீசாருக்கு தெரிய வந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில்
சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்களில் இருவர் எரிபொருளை அந்த
பூனைக் குட்டியின் மீது ஊற்றி தீயிட்டுள்ளனர். தீப்பற்றி எரிந்த நிலையில்
அந்த பூனைக்குட்டி அங்கும் இங்கு ஓடியதை அம்மூவரும் பார்த்த
வண்ணம் இருந்தனர் என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
அவர் தெரிவித்தார்.

உடலில் தீப்பற்றிய நிலையில் ஒடும் பூனையை குடியிருப்பாளர் ஒருவர்
கண்டு நீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். இச்சம்பவத்தை அறிந்த புகார்
தாரர் அந்த பூனையை அம்பாங்கில் உள்ள கால்நடை கிளினிக்கிற்குச்
சிகிச்சைக்காகக் கொண்டுச் சென்றுள்ளார் என்றார் அவர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று ஆடவர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும்
நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர்
சொன்னார்.


Pengarang :