NATIONAL

2028 ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூர்  தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தை வழங்க  செமிகொண்டக்டர் தொழில் மையம் உதவும் 

கோலாலம்பூர், மே 6: புக்கிட் பெருந்தோங், ரவாங்கில் செமிகொண்டக்டர் தொழில் மையத்தை நிர்மாணிப்பதானது, 2028 ஆம் ஆண்டுக்குள் மாநிலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 30 விழுக்காட்டை வழங்க  உதவும்.

பசுமை ஆற்றல் கருப்பொருள் கொண்ட தொழில்துறை பகுதியின் மேம்பாடு, கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என்று எம்பிஐ தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

“இது மலேசியாவின் ஒருங்கிணைந்த சுற்று (IC) வடிவமைப்பு பூங்கா மற்றும் பூச்சோங்கில் செமிகண்டக்டர் கட்டுமானம் தொடர்பான பிரதமரின் அறிவிப்பின் தொடர்ச்சியாகும்.

“பூச்சோங்கில் செமிகொண்டக்டர் ஆராய்ச்சி மையம், புக்கிட் பெருந்தோங்கில் ஒரு தொழில்துறை மையம்  ஆகியவை ஒரு இரட்டை தொழில்  புரட்சி  திட்டமாக   இருக்கும். இந்த வளர்ச்சி உள்ளூர் சமூகத்திற்குப் பொருளாதார பலன்களை வழங்கும்” என்று சைபொல்யாசன் மாட் யூசோப் கூறினார்.

எம்பிஐ திறந்த இல்ல உபசரிப்பில் நேற்று ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மார்ச் மாதம், வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட நான்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிலாங்கூர் கையெழுத்திட்டது. அவை “ARM Ltd“, “Shenzhen Semiconductor Industry Association (China)“, “Phison Malaysia“ மற்றும் “SkyeChip“ ஆராய்ச்சி ஆகிய நிறுவனங்கள் ஆகும்.

ஜூன் முதல் சிலாங்கூர் டிஜிட்டல் பொருளாதார தகவல் தொழில்நுட்பக் கழகத்தால் இயக்கப்படும் இந்த மையம் RM1 பில்லியன் வரை பொருளாதார வருவாயை உருவாக்கும் திறன் கொண்டது.

இது தொழில் வாய்ப்புகளையும் திறக்கும், குறிப்பாக பொறியியல் துறையில் RM5,000 முதல் RM7,000 வரை மாத சம்பளத்துடன் ஆகும்.

 


Pengarang :