NATIONAL

விளையாட்டுத் துறையில் பூர்வக்குடியினரின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை- ஹன்னா இயோ தகவல்

உலு சிலாங்கூர், மே 6- விளையாட்டுத் துறையில் பூர்வக்குடியினரின்
பங்கேற்பை அதிகரிப்பதற்காக பூர்வக்குடியினர் மேம்பாட்டு இலாகாவுடன்
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை ஒத்துழைக்கும்.

பூர்வக்குடியினர் கிராமங்களில் விளையாட்டு வாய்ப்புகளையும்
வசதிகளையும் அதிகரிப்பதில் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது என்று
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ
கூறினார்.

இங்குள்ள பூர்வக்குடி இளைஞர்களைச் சந்தித்ததில் ஆண்கள்
கால்பந்தாட்டத்திலும் பெண்கள் பூப்பந்து விளையாட்டிலும் ஆர்வம்
கொண்டிருப்பது தெரிய வந்தது என்று அவர் தெரிவித்தார்.

அவர்களின் வாழ்க்கை எத்தகையது? அவர்கள் எந்த மாதிரியான
விளையாட்டை விரும்புகின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஆர்மில்லாத விளையாட்டுகளை
அறிமுகப்படுத்துவதில் எந்த பயனும் இல்லை. கால்பந்தாட்ட பயிற்சிகள்
இங்கு பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அடுத்த முறை பூப்பந்து
பயிற்சிக்கு நாம் ஏற்பாடு செய்யலாம் என்றார் அவர்.

ஒற்றுமை அரசின் வேட்பாளரான பாங் சோக் தாவுடன் இங்குள்ள
கம்போங் பூலோ தெலுர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 பூர்வக்குடி
இளைஞர்களுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம்
ஹன்னா இயோ இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :