MEDIA STATEMENTNATIONAL

2 ஆம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்  டத்தின் ஸ்ரீ வான் அசிசா வேண்டுகோள்

செய்தி ; சு.சுப்பையா

கெர்லிங்.மே.2-  கோல குபு பாரு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 2 ஆம் எண்ணில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று காக் வான் என்று செல்லமாக அழைக்கப்படும் டத்தின் ஸ்ரீ டாக்டர் வான் அசிசா கெர்லிங் வட்டார இந்திய வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

நேற்று இரவு 8.00 மணிக்கு கெர்லிங் பொது மண்டபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சின் கீழ் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த அமைச்சின் கீழ்  செயல்படும் திட்டங்கள் குறித்து தமிழ்ப் பெண்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. சுமார் 200 பெண்கள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

காக் வான் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சி டத்தோ ரமணன் ஏற்பாடு செய்திருந்தார். டத்தோ ரமணனுடன் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், லிம் குவான் எங், ஆர்.எஸ்.என். ராயர்,  டேவிட் சொங், டாக்டர் சத்திய பிரகாஸ், ராஜன் முனுசாமி, ஹரிதாஸ், தீபன் சுப்ரமணியம் என்று பி.கெ.ஆர் மற்றும் ஜ.செ.க.வின் முன்னணித் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

வேட்பாளர் புவான் பாங் இறுதி நேரத்தில் வந்து கலந்து கொண்டார். அனல் பறக்கும் பிரச்சார உரை நிகழ்த்தப்பட்டது.

டத்தோ ரமணன், டத்தின் ஸ்ரீ வான் அசிசா, டாக்டர் சத்தியபிரகாஷ், லிம் குவான் எங், ஆர்.எஸ்.என். ராயர் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சார உரை நிகழ்த்தினார்கள்.

கொஞ்சும் மழலை குரலில் தமிழ் மற்றும் மலாய் மொழியில் டத்தின் ஸ்ரீ வான் அசிசா பேசி இந்திய பெண்களிடம் வேட்பாளர் பாங்கிற்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார்.

நம்பிக்கை கூட்டணி இனவாதத்தை ஆதரிக்காது. மலேசிய பல்லின மக்களை கொண்ட நாடு. நாட்டு மக்களை ஒற்றுமையாக ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பது கொள்கை. ஆகவே இனம், மதம் வேறுபாடின்றி அனைவரும் இந்த இடைத் தேர்தலில் ஜ.செ.க.வின் பாங் சோக் தாவுக்கு 2 ஆம் எண்ணில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதேபோல் இந்திய சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒன்று பட்டால் தான் சாதிக்க முடியும். நமது ஒற்றுமையை சீர் குலைக்க அந்நிய சக்திகள் ஊடுருவ பார்க்கின்றனர். அவர்களை முறியடித்து நாம் ஒற்றுமையாக இருந்து வேட்பாளர் பாங்கிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சத்தியா கேட்டுக் கொண்டார்


Pengarang :