MEDIA STATEMENTNATIONAL

கெர்லிங் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு பிரதமரின் துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வருகை.

செய்தி ; சு. சுப்பையா

கெர்லிங்.மே.2-  கெர்லிங் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ வான் அசிசா வருகை தந்தார். அவரது வருகையை தொடர்ந்து கெர்லிங் தோட்ட தமிழ்ப்பள்ளி பெரும் பரபரப்புக்கு உள்ளன. அவருடன் கல்வி அமைச்சர் பட்லினா சிடெக் வருகை தந்தார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணைவியான இவரை அரசியல் வட்டாரத்தில் ” காக் வான் ” என்று செல்லமாக அழைக்கப் படுகிறார். காக் வான்னுடன் தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துறை இணை அமைச்சர் டத்தோ ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ், புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் தீபன் மற்றும் பி.கெ.ஆர் கட்சியின் இந்தியர் தலைவர்கள் திரளாக வருகை தந்தனர்.

அனைவரையும் கணினி அறைக்கு அழைத்து சென்றனர். உடன் தலைமை ஆசிரியர் கலைவானர், பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்று எல்லாத் தரப்பினரும் காக் வானை அழைத்து சென்றனர்.

காக் வான் உரை நிகழ்த்துவதற்கு முன்னர் தமிழில் உரையாடினார். எப்படி இருக்கீங்க என்று அவர் கேட்ட போது மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

கண் மருத்துவராக இருந்தபோது இந்தியர்களிடம் வலிக்குதா என்று கேட்பேன். அப்போது ஓர் இரு வார்த்தைகள் தமிழில் உரையாடுவேன் என்று கலகலப்பாக கூறினார்.

இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆகவே நான் கவனமாக பேச வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவரது உரையின் போது வருகை தந்த எல்லா இந்திய மக்கள் பிரதிநிதிகளின் பெயரை அறிவித்தார்.

இப்பள்ளியில் ஆசிரமம் செயல் படுவதை வெகுவாக பாராட்டினார். இந்த ஆசிரமத்தில் உள்ள சிறார்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்.

தோட்ட தமிழ்ப் பள்ளி என்பதால் பெரிய திடல் உள்ளது. மேலும் இப்பள்ளியில் கோல்ப் விளையாட்டும் கற்று தரப் படுகிறது. இப்பள்ளியிலிருந்து எதிர் காலத்தில் நாட்டுக்கு உலக புகழ் பெற்ற கோல்ப் விளையாட்டாளர் ” ஒரு டைகர் உட்ஸ் ” கிடைப்பார் என்று எதிர்பார்க்கலாம் என்று கலகலப்பாக கூறினார்.

காக் வானின் இவ்வருகை கெர்லிங் தோட்ட தமிழ்ப் பள்ளியின் வரலாற்றில் இடம் பெரும் அம்சம் என்று இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக துணை தலைமை ஆசிரியராக இருந்து தற்போது தலைமை ஆசிரியராக இருக்கும் கலைவாணர் கூறினார்.


Pengarang :