ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாத்தாங் காலியில்  மாபெரும் பிரச்சாரக் கூட்டம் 1,000த்திக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர்

செய்தி ; சு. சுப்பையா

பாத்தாங் காலி மே.4- கோல குபு பாரு இடைத்தேர்தல் மா பெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்று பாத்தாங் காலி பண்டார் உத்தாமாவில் நடை பெற்றது. நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி இணைந்து நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் 1,000 மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி தலைமை தாங்கினார்.

சிலாங்கூர் மாநில மேம்பாட்டு திட்டங்கள் தொடர வேண்டும். கோல குபு பாரு இடைத் தேர்தலில் பாங்கின் வெற்றி மேம்பாட்டை உறுதி செய்யும். அவர் ஊராட்சி மன்றம் மற்றும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவார். எதிர்க் கட்சி வேட்பாளர் இணைந்து பணியாற்ற முடியாது. இதனால் இப்பகுதி மேம்பாட்டு திட்டங்கள் தடை படும்.  ஆகவே பாத்தாங் காலி மக்கள் 2 ஆம் எண் புவான் பாங்கிற்கு வாக்களிப்பீர்களா என்று வாக்காளர்களை நோக்கி மந்திரி புசார் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கு ஒன்று திரண்டிருந்த வாக்காளர் பாங்கிற்கு வாக்களிப்போம் என்று உற்சாகத்துடன் உரத்த குரலில் கூறினர்.

அமனா கட்சியின் தேசியத் தலைவர் மாட் சாபு, உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சானி அம்சா அகியோர் அனல் பறக்கும்  பிரச்சார உரை நிகழ்த்தினர். இவர்களோடு அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அம்னோவின் சிலாங்கூர் மாநில மூத்த தலைவர் டத்தோ சத்திம் பின் டிமான், சிலாங்கூர் மாநில செயலாளர், இளைஞர் பகுதித் தலைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேலும் இந்தக் பிரச்சாரக் கூட்டத்தில் ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் அந்தோணி லொக், கோபிந் சிங் டியோ, ஸ்டிவன் சிம், கணபதி ராவ் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சார உரை நிகழ்த்தினர். இவர்களோடு நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் புவான் பாங், கோல குபு பாரு இடைத் தேர்தல் கொள்கை அறிக்கை தனது 5 அம்ச திட்டத்தை தெரிவித்தார். அமரர் லி கி ஹொயொங் கொண்டு வந்த கோல குபு பாருவின் மேம்பாட்டை மேலும் துரிதப்படுத்த போவதாகவும் இப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் போவதாக கூறினார்.

பாத்தாங் காலியின் மூத்த தலைவரும் சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசாருமான தான் ஸ்ரீ முகமது தாயிப் கலந்துக் கொண்டார். பாங்கின் வெற்றிக்கு வீடு வீடாக சென்று தினந்தோறும் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தார். நெகிரி மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹருனும் கலந்துக் கொண்டார்.

ஆக மொத்தத்தில் மந்திரி புசார்கள், மடாணி அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் என பெரிய பட்டாளமே நேற்றை பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இரவு தொழுகைக்கு பின் இரவு 9.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இரவு 12.00 மணி வரை அனல் பறக்கும் பிரச்சார கூட்டம் நடை பெற்றது.


Pengarang :