ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வாதங்களை அடிக்கடி மாற்றுகின்றனர், சிக்கல்களை தவிற்க சந்தர்ப்பவாதிகளிடமிருந்து ஒதுங்கி கொள்ளுங்கள்

உலு சிலாங்கூர், மே 4: பெரிக்காத்தான் நேசனலின் நிலைப்பாடு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, அது கொள்கையற்ற சந்தர்ப்பவாதிகள் கூட்டு, அரசியலில் இருக்க  வேண்டும் என்பதற்காக எந்த ஒரு பிரச்சனையும் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தவிர ஒரு நிலைபாடு இல்லை.

மாநில பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்)  தலைவரான அவர், பெரிக்காத்தான் நேசனல் தலைவர்கள் அரசாங்கத்தைத் தாக்குவதற்காக அடிக்கடி  மாற்றி பேசுவதிலும்  திசை திருப்புவதாக இருக்கின்றனர்.   அவர்களின்  வாதங்கள் உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை, உண்மையான தரவு, ஆதாரம், புள்ளிவிவரங்கள் அல்லது நாட்டுக்கு  நலன் பயப்பதில்லை.

கோலா குபு பாரு மாநில சட்டமன்றத்தின் (டியூஎன்) தேர்தல் பிரச்சாரத்தை (பிஆர்கே) பார்க்கும்போது, எதிர்க்கட்சிகள் வாதம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் கோபத்தைத் தூண்டக்கூடியதாகவும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இடைத்தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, வேட்புமனு தாக்கல் செய்தப் பின் ஒரு பேச்சு. முதலில், அரசாங்கத்திற்கு  ஆதரவு இல்லை ஆட்சி மாற்றம் வருகிறது  என்று பிஎன்  தலைவர்கள்  குதித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் செய்வதை எல்லாம் தவறு என்றார்கள், ஆனால், அவர்களுடன்  இருக்கும்  உறுப்பினர்கள்  உட்பட எங்கள்  கொள்கைகளை  ஆதரித்து வருகின்றனர். அதனால்  அவர்கள் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறார்கள்.
“இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு தொனி மாறத் தொடங்கியது, தாக்குதல்களும் மாறியது. பற்றாக்குறை பட்ஜெட்டை வெளியிடுவதால் சிலாங்கூர் பொருளாதாரம் மங்கி வருவதாக கூறுகிறார்கள்.  பணவீக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

” சரி, இப்பொழுது பணவீக்கம் 1.8 உள்ளது. உங்கள் ஆட்சி காலத்தில்  மூன்று, நான்கு சதவீதமாக இருந்ததே! மூன்றுக்கும் மற்றும் ஒன்றுக்கும்  வித்தியாசம் புரியவில்லையா? இப்படிப்பட்ட ஒருவரை பொருளாதார அமைச்சராக வைத்திருந்தால்,  நாட்டு பொருளாதாரம் எப்படி மேம்பாடு காணும்?  அதனால்தான்  பெரிக்காத்தான் ஆட்சி தோல்வியடைந்தது, ”என்று நேற்றிரவு இங்கு நடந்த மெகா மக்கள் சந்திப்பு உரை நிகழ்ச்சியில் கூறினார்.

மே 3, 2024 அன்று பண்டார் உத்தாமா பத்தாங் கலியில் நடந்த  நிகழ்வில்,  EPF இன் நெகிழ்வான கணக்கு அல்லது கணக்கு 3-ஐத் தொடங்குவதை உதாரணமாக எடுத்துக் கொண்டால், சம்பந்தப்பட்ட கட்சிக்கு உறுதியான நிலைப்பாடு இல்லை என்பதை மேலும் தெளிவாக்கும்.  அதற்கு இந்த நாட்டை ஆளத் தகுதி இல்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இவர்கள் முன்பு EPF பை  எடுக்க  அணுமதித்ததை தவறு என்றோம், அது சிறிய  சேமிப்பு கொண்டவர்களின்  மூலதான சேமிப்பைக் குறைக்கும் என்பதால் அந்த முறை ஏற்புடையதல்ல என்கிறோம். பலர் (EPF) மற்றும் சிறிய சேமிப்பு,  முதியோர் சேமிப்பை நம்பி இருப்பவர்களுக்காக, மூன்றாவது கணக்கு உருவாக்கினோம், மீட்கப்படும் தொகையை ஒரு கட்டுக்குள் வைக்க வகை  செய்கிறோம்.
” அன்று பணத்தை  வெளியே எடுக்க   ஆதரித்தவர்கள் , இப்போது இபிஎபின்  மூன்றாவது கணக்கில் இருந்து கூட சிறிய தொகை எடுப்பது  தவறு என்கிறார்கள்.

அதனால்தான் PN க்கு நிலையான கொள்கை இல்லை. அவர்களின் கொள்கைகளும் ,செயல்பாடுகளும் நாட்டில்  ஸ்திரமின்மை ஏற்படுத்தி,  நாடு முன்னேற்றத்தை பாதிக்கும், நாட்டை  நெருக்கடியில்  தள்ளும் என்றார் அவர்.

மாறாக “ஹரப்பானில் 19 கூட்டணிக் கட்சிகள் உள்ளன, இது நாட்டின் ஸ்திரத்தன்மை நிலைத்திருப்பதை உறுதி செய்ய பாடுபடுகிறது. ஹராப்பானே மலேசியர்கள் மற்றும் இந்த மாநிலத்தின் தேர்வாக வேண்டும், எதிர்காலமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.


Pengarang :