NATIONAL

நீரில் முழ்கிய ஒன்பது நபர்கள் வெற்றிகரமாக மீட்பு, ஆறு பேர் காணவில்லை

லஹாட் டத்து, மே 6: நேற்றிரவு லெம்பா மக்சினா, மக்குவ், துங்கு பகுதியில் நீரில் முழ்கிய சம்பவத்தில் ஒன்பது நபர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்oட வேளையில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.

“இரவு 8.28 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு வந்ததாகவும் மொத்தம் 11 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் லஹாட் டத்து நகரத்திலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும்,” லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் டத்தோ சும்சோஹா ரஷிட் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்தவுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மற்றும் நள்ளிரவு 12 மணியளவில் ஒன்பது நபர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர், அதில் இருவர் காயமடைந்தனர்.

ஆறு பேர் இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் நடவடிக்கை இன்று காலை 6 மணிக்கு மீண்டும் தொடரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், லஹாட் டத்து மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி துல்பஹாரின் இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது, சம்பவம் தொடர்பான அறிக்கை கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :