NATIONAL

வாக்களிக்கும் உரிமையை புறக்கணிக்க வேண்டாம், வளர்ச்சியைக் கொண்டு வரும் வேட்பாளருக்கு வாக்களிப்போம்

ஷா ஆலம், மே 7- கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தல் வரும் மே
மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.

அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக லீ கீ ஹியோங் புற்று நோய்
காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்களிப்புக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே எஞ்சியுள்ள
நிலையில் அத்தொகுதி மக்கள் ஒரே எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதாவது தங்களின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக தவறாமல்
வாக்களிக்க வேண்டும் என்பதே அந்த எதிர்பார்ப்பாகும்.

மலேசிய பிரஜை என்ற முறையில் தேர்தலில் வாக்களிப்பது எனது
கடமை என்பதால் கோல குபு பாரு மண்ணின் மைந்தன் என்ற முறையில்
எனது ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்றுவேன் என்று மின்சார
பொருள் விற்பனை மையத்தின் உரிமையாளரான சோங் ஜியு இயேன்
(வயது 36) கூறினார்.

உங்கள் விருப்படி வேட்பாளரைத் தேர்வு செய்யுங்கள். ஆனால் நாட்டின்
எதிர்காலம் கருதி உங்கள் கடமையை முறையாக நிறைவேற்றுங்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி வட்டார பொருளாதார மேம்பாட்டிற்குப்
பங்காற்றுவார் என எதிர்பார்க்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தினத்தன்று மறவால் உங்கள் வாக்கினைச் செலுத்துங்கள் என்று
அரசு ஊழியரான அஸ்ருள் மசுமி (வயது 42) தெரிவித்தார். கோல குபு
பாருவுக்கு மேம்பாட்டைக் கொண்டு வருவார் எனக் கருதும்
வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாய்ப்பு எப்போதோ ஒரு முறைதான்
வரும். அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்
நினைவூட்டினார்.

நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர் வட்டார மேம்பாட்டிற்கு பங்காற்றுவார்
என்பதால் நாட்டின் பிரஜை என்ற முறையில் தவறாது வாக்களிக்க
வேண்டும் என்று பொறியாளரான அகஸ்டின் (வயது 43) தெரிவித்தார்.

கடந்த இருபது ஆண்டுகளாக நான் கோல குபு பாருவில் வசித்து
வருகிறேன். இக்காலக்கட்டத்தில் இங்கு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாம் விரும்பியதைப் பெறுவதற்கு ஏதுவாக
மறவால் தேர்தல் தினத்தன்று வாக்களிப்போம் என்றார் அவர்.

இதனிடையே, கோல குபு பாருவில் நீண்ட காலமாக வசிப்பவர் என்ற
முறையில் வாக்களிக்கும் கடமையை தாம் ஒருபோதும்
தவறவிட்டதில்லை என்று 75 வயதான லிம் சூ கீ சொன்னார்.


Pengarang :