ANTARABANGSA

ராஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எகிப்து கண்டனம்- உலக நாடுகள் தலையிடக் கோரிக்கை

கோலாலம்பூர், மே 8- பாலஸ்தீனத்தின் ராஃபா நகர் மீது இஸ்ரேஸ்
மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்களை எகிப்து வன்மையாகக்
கண்டித்துள்ளது.

இந்த தாக்குதல் அப்பகுதியில் வசிக்கும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட
பாலஸ்தீனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குத் தீவிரம்
கொண்டதாக உள்ளது என எகிப்திய வெளிறவு அமைச்சு கூறியது.

பாலஸ்தீன மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒரே
நுழைவாயிலாக ராஃபா எல்லை விளங்குகிறது. காஸா தீபகற்பத்தினான
உயிர்நாடியாகவும் இது கருதப்படுகிறது. போரில் காயமுற்றவர்களை
சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வதற்கும்
முற்றுகையிடப்பட்ட காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிப்
பொருள்களைக் கொண்டுச் செல்வதற்கும் இப்பகுதி பேருதவியாக உள்ளது
என அது குறிப்பிட்டது.

ஆபத்தான், நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் காஸா
தீபகற்பத்தில் நீடித்த போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான
முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளை
மேற்கொள்வதிலிருந்து இஸ்ரேல் விலகியிருக்க வேண்டும் என்று அரபு
எகிப்து குடியரசு கேட்டுக் கொள்கிறது என அறிக்கை தெரிவித்தது.

அதே சமயம், அங்கு நிலவி வரும் நெருக்கடியைத் தணிப்பதற்கு ஏதுவாக
ஆதிக்க நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைக்
கைவிடும்படி இஸ்ரேலுக்கு நெருக்குதல் தர வேண்டும் என்றும் எகிப்து
வலியுறுத்தியது.

அரச தந்திர முயற்சிகள் தொடரப்பட வேண்டிதன் அவசியத்தையும்
இப்பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நீடிப்பதற்கு வகை செய்யக்கூடிய பலன்கள் கிட்டுவதை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அது வலியுறுத்தியது.


Pengarang :