NATIONAL

மரம் விழுந்த சம்பவத்தால் நான்கு மோனோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

கோலாலம்பூர், மே 8: நேற்று புக்கிட் நானாஸ் மோனோ ரயில் நிலையம் அருகே மரம் விழுந்து சம்பவத்தால் நான்கு மோனோ ரயில் நிலையங்கள் துப்புரவு மற்றும் பழுதுபார்ப்பு பணிக்காகத் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் பயணிகள் பயணங்களை உறுதிசெய்ய மாற்று சேவையை செயல்படுத்துவதாக அறிக்கை ஒன்றில் ரேபிட் ரயில் தெரிவித்துள்ளது.

துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டியதன் காரணமாக நான்கு மோனோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அவை புக்கிட் நானாஸ், ராஜா ச்சுலான், புக்கிட் பிந்தாங் மற்றும் இம் பி ஆகிய நான்கு மோனோ ரயில் நிலையங்கள் ஆகும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணத்தை தொடர மாற்று சேவையாகப் பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இடையே இலவச பஸ் சேவையை ரேபிட் பஸ் ஏற்பாடு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோலாலம்பூர் நகர மன்றம் உதவியுடன் ரேபிட் ரயில் விரிவான துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

“எந்தவொரு மாற்றம் அல்லது புதிய தகவல்களுக்கு  ரேபிட் கேஎல்லின் சமூக ஊடக தளங்கள் மற்றும் பல்ஸ் ‘’ PULSE“ செயலி மூலம் அவ்வப்போது தெரிவிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது.

ரேபிட் ரயில் எதிர்பாராத தடங்கலுக்கு மன்னிப்புக் கோருகிறேன் மேலும் கூடிய விரைவில் முழு செயல்பாடுகளும் மீண்டும் தொடங்கப் படுவதை உறுதி செய்யும்.

– பெர்னாமா


Pengarang :