NATIONAL

உலகலாவிய நிலையில் கோவிட்-19 தடுப்பூசிகளை மீட்டுக் கொள்ள அஸ்ட்ராஸேனேகா முடிவு

பெங்களுரு, மே 8- மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் சந்தையில்
மிகுதியாக உள்ள காரணத்தால் தங்களின் தடுப்பூசிகளை உலகலாவிய
நிலையில் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளவுள்ளதாக அஸ்ட்ராஸேனேகா கூறியது.

மேலும், ஐரோப்பிய சந்தைக்கான வெக்ஸ்ஸேவ்ரியா தடுப்பூசிகளின்
விநியோக அதிகாரத்தையும் தாங்கள் மீட்டுக் கொள்வதாக அந்நிறுவனம்
அறிவித்துள்ளது.

பல்வேறு ரகங்களிலான கோவிட்-19 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ள
நிலையில் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் சந்தையில் மிகுதியாக
காணப்படுகின்றன. இதன் காரணமாக வெக்ஸ்ஸேவ்ரியா தடுப்பூசிக்கான
தேவை குறைந்து விட்டது. ஆகவே, இந்த தடுப்பூசிகள் இப்போது
தயாரிக்கப்படுவதும் விநியோகிக்கப்படுவதும் இல்லை என அது
குறிப்பிட்டது.

தங்கள் தயாரிப்பிலான தடுப்பூசிகள் காரணமாக இரத்த உறைவு மற்றும்
இரத்தத்தில் ப்ளெட்லட் எண்ணிக்கை குறைவு போன்ற பக்க விளைவுகள்
ஏற்படும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் அந்த
ஆங்லோ.சுவீடிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் சில தினங்களுக்கு ஒப்புக்
கொண்டது.

தடுப்பூசிகளை சந்தையிலிருந்து மீட்டுக் கொள்வதற்கான விண்ணப்பம் மே
5ஆம் தேதி செய்யப்பட்டு மே 7ஆம் தேதி அமலுக்கு வந்ததாக டெலிகிராப்
செய்தி வெளியிட்டுள்ளது.


Pengarang :