ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இன்று நாட்டின் பொருளாதார நிலையைப் பற்றி பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தினார்.

கோலாலம்பூர்  மே 22 ;- நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைப் பற்றி பகிர்ந்து கொள்ள  மக்கள் முன் தாம் நிற்பதாகக் கூறிய பிரதமர்.  அதே வேளையில்  இன்றைய  நடவடிக்கை  ஏன்  எடுக்கப்படுகிறது என்பது பற்றிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மக்களுக்கும் நாட்டுக்கும் புரிந்த நன்மை  மற்றும் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள வந்துள்ளதாகக் கூறினார்.

இந்த  2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த நாட்டின் பொருளாதார சாதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன. 2024 முதல் காலாண்டில், 4.2% என்ற விகிதத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம்; இது 3.9% என்று கணிக்கப்பட்ட பெரும்பாலான கட்சிகளின் மதிப்பீட்டை விட அதிகமாகும்  என்றார் அவர்.

உலகப் பொருளாதார  நிச்சயமற்ற நிலையிலும், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாடு , ஏறக்குறைய அனைத்துத் துறைகளிலும் உயர்ந்த வளர்ச்சியை எட்டியது ஊக்கமளிப்பதாக  குறிப்பிட்டார்.


Pengarang :