ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அரசாங்க செயல் திறனை திறனை மேம்படுத்துவது, ஊழலை ஒழித்தல் முக்கிய பணியாகும்

கோலாலம்பூர்  மே 22 ;- பிரதமர் தனது  உரையில் , மடாணி அரசாங்கம் நிறுவப்பட்ட பிறகு முக்கிய மற்றும் முதல் கவனம்  கட்டமைப்பு சிக்கல்களை கையாள்வதாக உள்ளதாக   கூறினார்.

அதாவது நாட்டின் பொருளாதாரத்தின் மூட்டுகள் மற்றும் வலிமையை பலவீனப்படுத்தும் முக்கியப் பிரச்சனைகள்  குறித்து கூறிய அவர்,  நீண்ட காலமாக நடுத்தர வருமானம் பெறும்  நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். குறைந்த வருவாய் மற்றும் பெருகி வரும் கடன் சுமை ஆகியவற்றால் கூட்டரசின்  நிதி  வள நிலையும் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. என்றும்,

பொருளாதாரக் கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பது எளிதான காரியம் அல்ல.
பல விஷயங்களைச் சரிசெய்து சீரமைக்க வேண்டும். சில சமயங்களில் புதிய கட்டுப்பாடுகளை  விதிக்க வேண்டி உள்ளது.  ஆனால் அக் கட்டுப்பாடுகள்,  மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப  அமைவது இல்லை, ஆனால் அப்படிப்பட்ட  நகர்வுகளின்  வழியே, மக்களின் நெடுநாளைய   பிரச்சனைகளை  களைய வேண்டிய இக்கட்டு  அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே, நாட்டின் நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டு  உள்ளதாகப் பிரதமர் கூறினார்?

இப்போது நிலையைச் சரி செய்ய தைரியமாக  இறங்குவதா?  அல்லது முன்னகர்வை கைவிடுவதா?  என்ற கேள்வி  எழுகிறது.

நான் முன்நகர்வைக் கைவிட்டால், வருங்கால சந்ததியினருக்கு அதிகச் சுமை ஏற்படும். நான் பின்னர் நிந்திக்கப்படுவதை விரும்பவில்லை, எனவே நான் இப்பொழுதே விமர்சனங்களை  தைரியமாக எதிர்கொள்ள முன் வருகிறேன்.  நான் தைரியமாக அதை எதிர்நோக்குகிறேன்,  இப்போது மாற்றத்தைக் கொண்டு வருகிறேன்  என்றார் அவர்..

” அனைத்தும் கடினமானவையே அவை தீர்க்கப்படாத வரை!  என்கிறார்- தாமஸ் புல்லர் (ஆங்கில வரலாற்றாசிரியர்) வார்த்தையை மேற்கோள் காட்டினார்

ஆக, இன்றைய  இக்கட்டுகளை தீர்க்க இரண்டு முக்கியச் சவால்களை  எதிர்கொள்ள வேண்டும்.
முதலாவது: மக்களின் பொருளாதாரம் மற்றும் வணிகச் சூழல் அமைப்பு; அத்துடன்
இரண்டாவது: மத்திய அரசின் பலவீனமான நிதி நிலை.

அதற்கு ஊழலை முற்றாக ஒழிக்க வேண்டும்  என வலியுறுத்தினார்.


Pengarang :