SELANGOR

சிலாங்கூர் எஃப்.சி. விளையாட்டாளரின் வீட்டில் கொள்ளை- இரு சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலம், மே 23- சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் அகமது குஸாய்மி பையின் வீட்டில்  நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் வீட்டின் கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள், நான்கு விலை மதிப்புள்ள தோள் பைகள், அனைத்துலக கடப்பிதழ் உள்ளிட்ட பொருள்களைக் களவாடிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய அந்த விளையாட்டாளரிடமிருந்து நேற்றிரவு 11.30 மணியளவில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

அந்த விளையாட்டாளருக்குச் சொந்தமான யமாஹா ஒய்15ஆர் ரக மோட்டார் சைக்கிளை திருடுவதற்கு அக்கொள்ளையர்கள் எம்.பி.வி. வாகனத்தைப் பயன்படுத்தியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :