ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நவீன மின் சுடலைக்கு  25 ஆண்டுகள்  போராட்டம் வெற்றியை நோக்கி பயணம்  ஆலய நிர்வாகம் பெருமிதம்

செய்தி ; சு.சுப்பையா.

கோல குபு பாரு.மே.27- சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் கோல குபு பாரு இந்து சுடுகாட்டை , கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் நிர்வகித்து  வருகிறது. இந்த இடு காட்டில் நவீன மின் சுடலை அமைக்க வேண்டும் என்று ஆலய நிர்வாகம் 25 ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த பிரச்னைக்கு கோல குபு பாரு இடைத்தேர்தல் நல்ல தீர்வை தரும் என எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் கெட்டதிலும்  நல்லது நடந்திருப்பதற்கு இங்கு வாழ் மக்கள் மகிழ்ச்சி  தெரிவித்தனர்.  

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரின் மறைவு எவரும் எதிர்பார்க்காதது, யாரும் விரும்பாதது  , ஆனால்  அவர்  இறந்தும்  இங்குள்ள மக்களின் நீண்ட கால பிரச்சனைகளுக்கு விடிவை கொண்டு வந்திருப்பதற்கு  இங்குள்ள மக்கள்  நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம் என்று ஆலய செயலாளர் ஆனந்தா தெரிவித்தார்.

இங்குள்ள இந்து  சுடுகாட்டில் சடலம் எரிப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்து சுடலையில் பாரம்பரிய முறையில் தகனம் செய்யப்பட்டு வந்தது. ஆலய நிர்வாகம் 2000 ஆண்டு வாக்கில் நவீன மின் சுடலை அமைக்க முயற்சி மேற் கொண்டாலும் பெரும் பண சுமையை கருத்தில் கொண்டு  மின்சுடலை  அமைப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்தது.  இறுதியில் இந்த கோல குபு பாரு இடைத் தேர்தலின் வழி இதற்கு  ஒரு  விடிவு கிடைத்துள்ளது.

கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் பாலசந்திரன் அவர்கள்.

ஆம் நாட்டின் பல இடங்களில்  இடுகாடு களையும், மின்சுடலைகளையும் நிர்வகித்து வரும் நிர்வாண நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலா துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் மூலம் உதவி கரம் நீட்டியுள்ளது.  அது  இரண்டு அடுப்புகள் கொண்ட நவீன மின் சுடலையும் இறுதி மரியாதை செய்ய ஒரு சிறிய மண்டபமும் கொண்ட நவீன மின் சுடலை கட்டித் தர நிர்வாண நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கு மத்திய அரசின் சுற்றுலா துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் பெரும் பங்காற்றினார். அவரது அரிய முயற்சியால் இந்த நவீன மின் சுடலை கோல குபு பாரு சுற்று வட்டார மக்களுக்கு விரைவில் கிடைக்கவிருக்கிறது.

ரவாங்கிற்கு அடுத்து நவீன மின் சுடலை கிடையாது. கோல குபு பாரு மக்கள் நவீன மின் சுடலை வேண்டி செராண்டா அல்லது ரவாங்கிற்கு தான் சடலங்களை கொண்டு சென்று வந்தனர். இந்த சாலையும் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படும். இதனால் இறுதி மரியாதை செய்வதில் கூட கோல குபு பாரு மக்கள் பெரும் சவாலை எதிர் நோக்கி வந்தனர்.

கோல குபு பாரு, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் பாலசந்திரன் அவர்கள் கடந்த 25 ஆண்டு கால போராட்டத்திற்கு இந்த இடைத் தேர்தலில் நல்ல தீர்வை மடாணி அரசின் ஒத்துழைப்போடு கொண்டு வந்தார்.

ஆலயத் தலைவரோடு கோல குபு பாரு வட்டார தொழிலதிபர் டத்தோ பி.எஸ்.சாமியும் இணைந்து கோல குபு பாரு மக்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.

கடந்த 9ஆம் தேதி நிர்வாண நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலய முக்கிய பொறுப்பாளர்களுடன் வந்து  கோல குபு பாரு இந்து சுடுகாட்டை பார்வையிட்டார். மின் சுடலை கட்டும் இடத்தையும் உறுதி செய்தார்.  இரண்டு அடுப்புகள் மற்றும் சிறிய மண்டபமும் கட்ட முடிவு செய்யப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஆலய நிர்வாகம் பெரும் சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.  சமீபத்தில் 10 லட்சம் ரிங்கிட் செலவில் 5 வது மகா கும்ப அபிசேகத்தை வெற்றிகரமாக  நடத்திய  சில மாதங்களுக்கு பின் 25 ஆண்டுகால கனவாக  இருந்த  இந்த மின் சுடலைத் திட்டத்தை நிறைவேற்றுவது மேலும் ஒரு சாதனையாகும் என்றார்  ஆலய செயலாளர் ஆனந்தா,  ஆலய தலைவர் பாலச்சந்திரன் அவர்களின் சிறந்த தலைமைத்துவம் சிறந்த நிர்வாகமும் தான் இதற்கு முழுமுதற் காரணம் என்று தெரிவித்தார்.

இந்த நவீன மின் சுடலையை நிர்வாண நிறுவனம் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் கட்டி கொடுத்து விடும். அதன் பின் இந்த நவீன மின் சுடலையை கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய் நிர்வாகம் பராமரிக்கும் என்று அவர் கூறினார்.கோல குபு பாரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் பாலசந்திரன் அவர்கள்.


Pengarang :