ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எம்ஆர்டி புத்ராஜெயா லைன் தொடர்பு கட்டமைப்பு சிக்கலை எதிர்கொள்வதால், ரயில்  பேருந்து சேவைகள்

கோலாலம்பூர், மே 31: புத்ராஜெயா வழித்தடத்தில் உள்ள எம்ஆர்டி ரயில் சேவை தற்போது தொடர்பு கட்டமைப்பு சிக்கலை எதிர்கொள்கிறது.

அதன்படி, Rapid Rail Sdn Bhd (Rapid Rail) இன்றிரவு ஒரு அறிக்கையில், கீழ்கண்ட வழி த்தடங்களுக்கு இடைநிலை ரயில் மற்றும் பேருந்து சேவைகளை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

“குவாசா டமன்சாரா நிலையத்திலிருந்து வரும்  எம்ஆர்டி ரயில் சான் சாவ் லின் நிலையம் வரையில், சான் சோவ் லின் நிலையத்திற்கும் புத்ராஜெயா சென்ட்ரல் நிலையத்துக்கும் இடையே  பேருந்து சேவைகளும் வழங்கப்படும் ” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Rapid Rail இன் கூற்றுப்படி, பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயனர்கள் வாடிக்கையாளர் சேவை கவுண்டரில் ஒரு வழி பயண கூப்பனைப் பெறலாம் மற்றும் இன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அதைப் பயன்படுத்த வேண்டும்.

சீர்குலைவுக்கான காரணத்தை அதன் பொறியாளர்கள் தீவிரமாக கண்டறிந்து வருவதாகவும் ரேபிட் ரயில் தெரிவித்துள்ளது.

“ரேபிட் கேஎல்லின் சமூக ஊடக தளத்தின் மூலம் புத்ராஜெயா லைன் எம்ஆர்டி சேவையின் நிலை குறித்த சமீபத்திய தகவல்களை  பெறவும்,” அது நினைவுறுத்துகிறது, மேலும் பயணிகள் அனுபவிக்கும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டது.


Pengarang :