ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

செம்புர்ணா கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம்- மலேசியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை

கோலாலம்பூர், ஜூன் 3- சபா மாநிலத்தின் செம்புர்ணாவிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று பிற்பகல் 2.49 மணியளவில் ரிக்டர் அளவில் 3.3 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் 4.4 டிகிரி வடக்கிலும் 118.9 டிகிரி கிழக்கிலும் பத்து கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது.

இந்த நில நடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி ஆபத்து ஏற்படவில்லை என்றும் அத்துறை தெரிவித்தது.


Pengarang :