Speaker Dewan Negeri Selangor, Ng Suee Lim. Foto:
ECONOMYMEDIA STATEMENT

சிகிஞ்சான் தொகுதியிலுள்ள 30 ஏழைக் குடும்பங்களுக்கு வெ.300 மதிப்புள்ள உதவிப் பொருள்கள் விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 8- ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் விதமாக சிகிஞ்சான் தொகுதியைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு தலா 300 வெள்ளி மதிப்பிலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப் படுகின்றன.

மாதம் 300 வெள்ளி வழங்க வகை செய்யும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத்  திட்டத்திற்கு அப்பாற்பட்டு இந்த உதவித் தொகை  கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க நாங்கள் எடுத்துள்ள முயற்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது. ஐ.எஸ்.பி. குரூப் நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆறு மாத காலத்திற்கு உதவிப் பொருட்களை வழங்குவர் என அவர் சொன்னார்.

அதன் பின்னர் உதவித் தேவைப்படக் கூடிய இதர குடும்பங்களை சட்டன்ற தொகுதி சேவை அலுவலகம் அடையாளம் காணும். உண்மையிலே தகுதி உள்ள குடும்பங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதை உறுதி செய்ய நாங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்தாற்போல் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவோம் என்றார் அவர்.

அனைத்துத் தரப்பினருக்கும் உதவும் நோக்கில் சமூக நலத் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் மக்களின் சுமையைக் குறைப்பதற்கான கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இவ்வாண்டு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு பலியிடல் நிகழ்வுகளை மேற்கொள்ள 20 ஆடுகள் மற்றும் 6 மாடுகளை தமது தரப்பு வழங்கவுள்ளதாக அவர் லிம் சொன்னார்.

இந்த பிராணிகள் கவுன்சிலர்கள் மற்றும் கிராமத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தொகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :