GEORGE TOWN, 9 Okt — Kenderaan yang membawa petugas Kementerian Kesihatan Malaysia (KKM) memasuki Penjara Reman Pulau Pinang hari ini. Penjara Reman Pulau Pinang telah membuka pusat rawatan khas bagi merawat tahanan di dalam penjara itu yang dapati positif COVID-19 bagi menghadapi sebarang kemungkinan termasuk jika ramai yang dijangkiti wabak tersebut. Baru-baru ini, Ketua Pengarah Kesihatan Tan Sri Dr. Noor Hisham Abdullah memaklumkan terdapat satu kluster baru iaitu Penjara Reman tersebut selepas saringan mendapati tujuh orang positif COVID-19 termasuk seorang banduan yang meninggal dunia pada 5 Okt. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு சிறைக் கைதிகளை சந்திக்க அனுமதி

கோலாலம்பூர், ஜூன் 11: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு அனைத்து சிறை சாலைகள், தார்மீக புனர்வாழ்வு மையங்கள், சிறப்பு மறுவாழ்வு மையங்கள், சிறப்பு தடுப்பு மையங்கள் மற்றும் ஹென்றி கர்னி பள்ளியில் உள்ள சிறைக் கைதிகளை அவர்களின் குடும்பங்களை மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் சந்திக்க அனுமதிக்கப் படுகின்றனர்.

முஸ்லிம் கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் எதையும் கொண்டு வர வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஆனால், சிறைச்சாலை கேன்டீனில் உணவு வாங்க முடியும் என்றும் சிறைச்சாலை துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

“நேரில் சந்திக்கும் முறையைத் தேர்ந்தெடுக்கும் குடும்பங்களுக்கு காலை 8.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை பார்வையிடும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். மேலும், சந்திக்கும் முறையை எளிதாக்க விசிட்டிங் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை கொண்டு வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை மூலம் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதால், வருகையாளர்கள் கைதிகளுக்கு பணம் கொடுக்க ஊக்குவிக்கப் படுவதில்லை.
“தேர்வுக் கட்டணம் செலுத்துதல் போன்ற சில விஷயங்களுக்காக கைதிகளுக்கு பணம் கொடுக்க விரும்பினால், தயவு செய்து அதிகாரப்பூர்வப் பிபிடி ரசீதைப் பெறுங்கள்.

மேலும், ஜூன் 19 முதல் 21 வரை இணைய சந்திப்புகளும் (வீடியோ அழைப்புகள்) அனுமதிக்கப்படுகின்றன.

“சிறையில் நேரில் சந்திக்க முடியாத குடும்பங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். மேலும் தகவலுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :