ECONOMYMEDIA STATEMENT

கெந்திங் ஹைலேண்ட்ஸ் தீம் பார்க்கில் உள்ள கட்டிடங்களில்  தீ !

கோலாலம்பூர், ஜூன் 15:  கெந்திங் ஹைலேண்ட்ஸ்  தீம் பார்க்கில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
பகாங்கில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையம் நேற்று மாலை 4.55 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பான அழைப்பைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, கெந்திங் ஹைலேண்ட்ஸ்   மற்றும் பெந்தோங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் தீயணைப்புக் குழு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஆபரேஷன் கமாண்டர் முஹமட் அசிம் ஜகாரியா தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்தது.

“இரண்டாவது மாடி, தீம் பார்க் கட்டிடத்தில் தீப்பிடித்து நான்காவது மாடிக்கும் பரவியதாக ஆபரேஷன் கமாண்டர் அறிவித்தார்.

இரண்டு 200 அடி நீர் குழாய் , இரண்டு முனைகள் மற்றும் அழுத்தப்பட்ட தீ ஹைட்ராண்டுகளில் இருந்து தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் பணியை தீயணைப்புப் படையினர் செய்தனர்.

ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. ஜண்டா பாயின் தன்னார்வ தீயணைப்புப் படையும் தீயை அணைக்கும் பணியில் உதவியது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், மேலதிக விவரங்களை விளக்காமல், பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சய்ஹாம் முகமது கஹர் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.


Pengarang :