ECONOMYMEDIA STATEMENT

கோல மூடா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

கப்பளா பாத்தாஸ், ஜூன் 17- கோல மூடா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த  இரு நண்பர்கள் நீரில் மூழ்கி மாண்டதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜூல்கிப்ளி சுலைமான் கூறினார்.

கடற்கரையில்  சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த  ஹோ வேய் கியாட் (வயது 26) மற்றும் லிம் யூ யீ (வயது 14 )  ஆகிய இருவரும் திடீரென மூழ்கியதாக அவர் சொன்னார்.

பதிமூன்று இளைஞர்கள்  ஒன்றுகூடி கடலில் குளித்துக் கொண்டிருந்த போது மாலை 5.00 மணியளவில் அவர்களில் இருவர் காணாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. ஹோவின் உடல் மாலை 6.50 மணிக்கும்  லிம்மின் ஊடல் இரவு 7.30 மணிக்கும் மீட்கப்பட்டது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இறந்தவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக கப்பளா பாத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன என்றார் அவர்.


Pengarang :