Muzium Sultan Alam Shah, Shah Alam. Foto Facebook
ECONOMYMEDIA STATEMENT

மதிப்பீட்டு வரி உயர்வு தொடர்பான ஆட்சேபங்களை எம்.பி.எஸ்.ஏ. ஆகஸ்டு மாதம்  செவிடுக்கும்

ஷா ஆலம், ஜூன் 19 – ஷா ஆலம் மாநகர்  மன்றம்  (எம்.பி.எஸ்.ஏ.) உத்தேச மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிரான  சொத்து உரிமையாளர்களின் ஆட்சேபனைகளை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி செவிமடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஆட்சேபம் தெரிவித்த நபர்களுடன் நேரடியாக நடத்தப்படும் எனக் கூறிய டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமட் யாத்திம்,  ஜூன் 14 காலக்கெடுவிற்குள் 5,669 ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முடிவு எடுக்கப்பட்டவுடன் மாநகர் மன்றம்  14 நாட்களுக்குள் கடிதம் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு முடிவை தெரிவிக்கும் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருவதற்கு முன்  திருத்தப்பட்ட மதிப்பீட்டு வரிப் பட்டியல் மாநில அரசிடம்  மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, புதிய வரி விகிதம் ஜனவரி 1 ஆம் தேதி முதல்  முதல் அமலுக்கு வரும் என சொத்து உரிமையாளர்களுக்கு மாநகர் மற்றம்  தெரிவித்திருந்தது.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் இலாப நோக்கமற்ற பொது வளாகங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Pengarang :