ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நீரில் நிற மாற்றம் அதிகரிப்பு- நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணி நிறுத்தம்

ஷா ஆலம், ஜூன் 22-   சுத்திகரிக்கப்பட்ட  நீரில் நிறமாற்றம்  அதிகரித்த சம்பவத்தைத் தொடர்ந்து  புக்கிட் நெனாஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் கோலாலம்பூரில் உள்ள சில பகுதிகளில் ஏற்படக்கூடிய  திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையின்  தாக்கத்தைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில்  பயனீட்டாளர்களுக்கு டேங்கர்கள் மூலம் மாற்று நீர் விநியோகம் வழங்கப்படும் என்று அது தெரிவித்தது.

மேலும்  இந்த நீர் நிறமாற்றச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் தனது தரப்பு இன்னும் தீவிரமாக இருப்பதாகவும் அத்நிறுவனம் குறிப்பிட்டது.

நீர் விநியோகத் தடை தொடர்பான மேல் விபரங்களுக்கு பயனீட்டாளர்கள் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் முகநூல், இண்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவும்  15300 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம் அல்லது https://www.airselangor.com/ அகப்பக்கத்தை வலம் வரலாம்.


Pengarang :