MEDIA STATEMENTSUKANKINI

சுக்மா போட்டிகளுக்கான வில்வித்தை மற்றும் ரக்பி அணிகளை வலுப்படுத்த எம்பிஐ RM200,000 நன்கொடை

ஷா ஆலம், ஜூன் 25: அடுத்த மாதம் நடைபெறவுள்ள சுக்மா போட்டிகளுக்கான வில்வித்தை மற்றும் ரக்பி அணிகளை வலுப்படுத்த எம்பிஐ RM200,000 வழங்கியது.

சிலாங்கூர் வில்வித்தை சங்கம் மற்றும் சிலாங்கூர் ரக்பி கிளப்பிற்கு தலா RM100,000  நன்கொடைகள் பெறுவதாக எம்பிஐ தலைமை நிர்வாக அதிகாரி சாய்போல்யாசன் எம் யூசோப் தெரிவித்தார்.

“இந்த இரண்டு விளையாட்டுகளுக்கும் எம்பிஐ நிதியுதவி வழங்குவதன் முக்கிய நோக்கம், சுக்மா விளையாட்டு வீரர் பயிற்சி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கி  தயார்படுத்துவது உட்பட அவர்களின் திட்டங்களை செயல் படுத்துவதாகும்.

“மேலும் சிலாங்கூர் மாநில வீரர்களை மேம்படுத்துவதோடு புதிய திறமைகளை தேடுவதைத் தொடரவும் எம்பிஐ உதவ விரும்புகிறது” என்று அவர் தனது உரையின் போது கூறினார்.

நேற்று எம்பிஐ தலைமையகத்தில் இந்த நன்கொடையை சாய்போல்யாசன் இரு சங்கங்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமியும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், குறிப்பாக தனியார் துறை மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்தின் துணை நிறுவனங்களின் பெருநிறுவன ஒத்துழைப்பை நஜ்வான் வரவேற்றார்.

“மாநில அரசின் துணை நிறுவனங்களும் உதவி வழங்க நாங்கள் ஊக்குவிக்கிறோம். இது அணிக்கு சில தார்மீக ஆதரவை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் கூறினார்.


Pengarang :