MEDIA STATEMENTPBT

பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றம் சுற்றுப்புற பாதுகாப்பு திட்டத்திற்கு RM 550,000 ஒதுக்கியது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 – பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிபிஜே) இந்த ஆண்டு பெட்டாலிங் ஜெயா  அண்டை அயலார் சமூக பாதுகாப்புக் குழுத் திட்டத்திற்கு அரை மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.

அதன் டத்தோ பண்டார் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன், RM550,000 ஒதுக்கீட்டில், அடுத்த ஆண்டுக்குள் பெட்டாலிங் ஜெயாவை ஒரு ஸ்மார்ட், நிலையான மற்றும் நெகிழ்ச்சியான நகரமாக மாற்றும் கவுன்சிலின் திட்டத்திற்கு ஏற்ப, சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு குடியிருப்பாளர் குழுவிற்கும் RM3,000 வழங்கப்பட்டு 142 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன என்றார்.

“2011 இல் முதன்முதலில் அறிமுகப் படுத்தப் பட்ட PKKPJ, பெட்டாலிங் ஜெயா பாதுகாப்பு மாஸ்டர் திட்டத்தின் கீழ் ஒரு முன்முயற்சியாகும்.

“இது குடியிருப்பாளர்கள் சங்கங்கள், சுற்றுப்புற கண்காணிப்பு குழுக்கள் மற்றும் கிராம சமூக மேலாண்மை கவுன்சில்கள் அண்டை பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

அந்நிகழ்வில் பெட்டாலிங் ஜெயா பி ஜே எஸ் 1 சவுத் அவென்யூ  குடியிருப்பாளர் சங்கம், நிலையான மற்றும் நெகிழ்ச்சியான சமூக விருது 2023 விழாவில்,  20,00 வெள்ளிக்கான மாதிரி காசோலையை பெற்றது. பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் அதை எடுத்து வழங்கினார்.

ஐந்து குடியிருப்பாளர் குழுக்களுக்கு சிறந்த PKKPJ அறிக்கை விருது மற்றும் RM1,000 ரொக்க ஊக்கத் தொகையையும் Zahri வழங்கினார்.
“இந்த விருது முதன் முறையாக அவர்களின் குடியிருப்பு பகுதிகளில் ரோந்து போன்ற பாதுகாப்பு முயற்சிகளில் செயல்படும் சங்கங்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

அரா இம்பியன் குடியிருப்பாளர்கள் சங்கம், ஜாலான் 14/1-14 குடியிருப்பாளர்கள் சங்கம், பிஜேஎஸ் 1 சவுத் அவென்யூ குடியிருப்போர் சங்கம், பிஜேஎஸ் 10 தாமான் ஸ்ரீ சுபாங் குடியிருப்போர் சங்கம் மற்றும் தேச மென்தாரி பிளாக் 5 அக்கம்பக்க கண்காணிப்பு ஆகியவை இந்த விருதை வென்றன.


Pengarang :